»   »  மாமனாருக்கு ஓ! மருமகனுக்கு ஊஊ..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து நடிக்கப் போகும் பெரும் சந்தோஷத்தில் மூழ்கிக் கிடக்கும் ஷ்ரியா, ரஜினியின் மருமகன்தனுஷுடன் நடித்து வந்த திருவிளையாடல் படத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டார்.ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறார், ஆயிஷா டாகியா நடிக்கப் போகிறார், த்ரிஷா நடிக்கப் போகிறார் என்று ஆளாளுக்கு சிவாஜிபடத்தில் ரஜினியின் ஜோடி யார் என்று ஆரூடம் கூறிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஷ்ரியா ரஜினியின் அடுத்த ஹீரோயின்என்று குண்டைப் போட்டனர் ஏவி.எம். நிறுவனத்தினர்.இந்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப் போயுள்ளார் ஷ்ரேயா. ரஜினியுடன் நடிக்கப் போகும் நாளுக்காக பரவசத்துடன் தினசரிஏதாவது ஒரு பத்திரிகைக்கு, வலியப் போய் எதையாவது கூறி வருகிறார். அம்மணி அதிகம் பேசுவது போலத் தோன்றுவதால், ரஜினி பற்றித் தெரிந்தவர்கள், ஆத்தா அடக்கமாப் பேசு, அப்புறம் படத்தைவிட்டு தூக்கிறப் போறாக என்று எச்சரித்துள்ளார்களாம்.இதனால் ஆரம்பத்தில் காட்டிய அமர்க்கள ஆர்வத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு லேசு பாசாக பேட்டிகள் கொடுத்துவருகிறார் ஷ்ரியா.ரஜினியுடன் ஜோடியாக நடிக்கப் போகும் ஆர்வத்தில் இருக்கும் ஷ்ரியாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரும் குழப்பம்.அதாவது ஏற்கனவே தனுஷுடன் திருவிளையாடல் படத்தில் அவர் புக் ஆகியிருந்தார், அப்படத்தில் நடித்தும் வந்தார். ஒரு சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில்தான் சிவாஜி பட வாய்ப்பு ஷ்ரியாவுக்கு வந்தது. ஒரே நேரத்தில் எப்படிமாமனாருடனும், மருமகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடுவது என்ற குழப்பத்தில் இருந்த ஷ்ரியாவுக்கு ரஜினியே தீர்வையும்சொன்னாராம்.வேண்டுமானால் தனுஷ் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம், நான் தனுசுடன் பேசிக் கொள்கிறேன் என்றாராம். இதையடுத்துதனுசும் ஷ்ரியாவை போனில் பிடித்து என் படத்தில் இருந்து விலகிக்குங்க.. எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. மாமா படத்தைநல்லபடியா முடிச்சுக் குடுங்க என்றாராம்.இதையடுத்து தனுஷ் படத்தில் இருந்து ஷ்ரியா விலகிக் கொண்டுவிட்டார்.ஸோ, மாமனாருடன் மட்டுமே டூயட் பாடப் போகிறார் ஷ்ரியா.எப்படியோ ரஜினிக்கும் தனுசுக்கும் மட்டுமல்லாது படம் பார்க்கப் போகும் நமக்கும் ஏற்பட இருந்த தர்மசங்கடம் தீர்ந்தது.

மாமனாருக்கு ஓ! மருமகனுக்கு ஊஊ..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து நடிக்கப் போகும் பெரும் சந்தோஷத்தில் மூழ்கிக் கிடக்கும் ஷ்ரியா, ரஜினியின் மருமகன்தனுஷுடன் நடித்து வந்த திருவிளையாடல் படத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டார்.ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறார், ஆயிஷா டாகியா நடிக்கப் போகிறார், த்ரிஷா நடிக்கப் போகிறார் என்று ஆளாளுக்கு சிவாஜிபடத்தில் ரஜினியின் ஜோடி யார் என்று ஆரூடம் கூறிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஷ்ரியா ரஜினியின் அடுத்த ஹீரோயின்என்று குண்டைப் போட்டனர் ஏவி.எம். நிறுவனத்தினர்.இந்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப் போயுள்ளார் ஷ்ரேயா. ரஜினியுடன் நடிக்கப் போகும் நாளுக்காக பரவசத்துடன் தினசரிஏதாவது ஒரு பத்திரிகைக்கு, வலியப் போய் எதையாவது கூறி வருகிறார். அம்மணி அதிகம் பேசுவது போலத் தோன்றுவதால், ரஜினி பற்றித் தெரிந்தவர்கள், ஆத்தா அடக்கமாப் பேசு, அப்புறம் படத்தைவிட்டு தூக்கிறப் போறாக என்று எச்சரித்துள்ளார்களாம்.இதனால் ஆரம்பத்தில் காட்டிய அமர்க்கள ஆர்வத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு லேசு பாசாக பேட்டிகள் கொடுத்துவருகிறார் ஷ்ரியா.ரஜினியுடன் ஜோடியாக நடிக்கப் போகும் ஆர்வத்தில் இருக்கும் ஷ்ரியாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரும் குழப்பம்.அதாவது ஏற்கனவே தனுஷுடன் திருவிளையாடல் படத்தில் அவர் புக் ஆகியிருந்தார், அப்படத்தில் நடித்தும் வந்தார். ஒரு சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில்தான் சிவாஜி பட வாய்ப்பு ஷ்ரியாவுக்கு வந்தது. ஒரே நேரத்தில் எப்படிமாமனாருடனும், மருமகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடுவது என்ற குழப்பத்தில் இருந்த ஷ்ரியாவுக்கு ரஜினியே தீர்வையும்சொன்னாராம்.வேண்டுமானால் தனுஷ் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம், நான் தனுசுடன் பேசிக் கொள்கிறேன் என்றாராம். இதையடுத்துதனுசும் ஷ்ரியாவை போனில் பிடித்து என் படத்தில் இருந்து விலகிக்குங்க.. எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. மாமா படத்தைநல்லபடியா முடிச்சுக் குடுங்க என்றாராம்.இதையடுத்து தனுஷ் படத்தில் இருந்து ஷ்ரியா விலகிக் கொண்டுவிட்டார்.ஸோ, மாமனாருடன் மட்டுமே டூயட் பாடப் போகிறார் ஷ்ரியா.எப்படியோ ரஜினிக்கும் தனுசுக்கும் மட்டுமல்லாது படம் பார்க்கப் போகும் நமக்கும் ஏற்பட இருந்த தர்மசங்கடம் தீர்ந்தது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து நடிக்கப் போகும் பெரும் சந்தோஷத்தில் மூழ்கிக் கிடக்கும் ஷ்ரியா, ரஜினியின் மருமகன்தனுஷுடன் நடித்து வந்த திருவிளையாடல் படத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டார்.

ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறார், ஆயிஷா டாகியா நடிக்கப் போகிறார், த்ரிஷா நடிக்கப் போகிறார் என்று ஆளாளுக்கு சிவாஜிபடத்தில் ரஜினியின் ஜோடி யார் என்று ஆரூடம் கூறிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஷ்ரியா ரஜினியின் அடுத்த ஹீரோயின்என்று குண்டைப் போட்டனர் ஏவி.எம். நிறுவனத்தினர்.

இந்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப் போயுள்ளார் ஷ்ரேயா. ரஜினியுடன் நடிக்கப் போகும் நாளுக்காக பரவசத்துடன் தினசரிஏதாவது ஒரு பத்திரிகைக்கு, வலியப் போய் எதையாவது கூறி வருகிறார்.


அம்மணி அதிகம் பேசுவது போலத் தோன்றுவதால், ரஜினி பற்றித் தெரிந்தவர்கள், ஆத்தா அடக்கமாப் பேசு, அப்புறம் படத்தைவிட்டு தூக்கிறப் போறாக என்று எச்சரித்துள்ளார்களாம்.

இதனால் ஆரம்பத்தில் காட்டிய அமர்க்கள ஆர்வத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு லேசு பாசாக பேட்டிகள் கொடுத்துவருகிறார் ஷ்ரியா.

ரஜினியுடன் ஜோடியாக நடிக்கப் போகும் ஆர்வத்தில் இருக்கும் ஷ்ரியாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரும் குழப்பம்.அதாவது ஏற்கனவே தனுஷுடன் திருவிளையாடல் படத்தில் அவர் புக் ஆகியிருந்தார், அப்படத்தில் நடித்தும் வந்தார்.


ஒரு சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில்தான் சிவாஜி பட வாய்ப்பு ஷ்ரியாவுக்கு வந்தது. ஒரே நேரத்தில் எப்படிமாமனாருடனும், மருமகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடுவது என்ற குழப்பத்தில் இருந்த ஷ்ரியாவுக்கு ரஜினியே தீர்வையும்சொன்னாராம்.

வேண்டுமானால் தனுஷ் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம், நான் தனுசுடன் பேசிக் கொள்கிறேன் என்றாராம். இதையடுத்துதனுசும் ஷ்ரியாவை போனில் பிடித்து என் படத்தில் இருந்து விலகிக்குங்க.. எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. மாமா படத்தைநல்லபடியா முடிச்சுக் குடுங்க என்றாராம்.

இதையடுத்து தனுஷ் படத்தில் இருந்து ஷ்ரியா விலகிக் கொண்டுவிட்டார்.

ஸோ, மாமனாருடன் மட்டுமே டூயட் பாடப் போகிறார் ஷ்ரியா.

எப்படியோ ரஜினிக்கும் தனுசுக்கும் மட்டுமல்லாது படம் பார்க்கப் போகும் நமக்கும் ஏற்பட இருந்த தர்மசங்கடம் தீர்ந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil