»   »  சத்ரபதி ஷ்ரேயா ரஜினியுடன் நடிக்கும் சிவாஜி படம் இன்னும் கூட வெளியாகவில்லை. அதற்குள் ரஜினி ராசி ஷ்ரேயாவைத் தாக்க ஆரம்பித்து விட்டதாம். சிவாஜியில் ரஜினியுடன் நடிக்க எத்தனையோ நடிகைள் போட்டா போட்டி போட்டு கும்மியடித்துக் கொண்டிருந்த நிலையில் சத்தமே போடாமல் சைக்கிள் கேப்பில் ரஜினிக்கு ஜோடியாகியவர் ஷ்ரேயா. படத்தில் மேலும் இரண்டு ஹீரோயின்கள் என்று வதந்திகள் உலவி வந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிவாஜியில் கலக்க ஆரம்பித்துள்ளார். ரஜினியும், ஷ்ரேயாவும் ஆடிய பாடல் காட்சியைத்தான் முதலில் சுட்டார்கள். ஹைதராபாத்தில் நடந்த அந்த ஷூட்டிங்கின்போது, ஷ்ரேயாவின் நடனத் திறமையைப் பார்த்த ரஜினி, அவரையே அதிகம் போகஸ் செய்யுமாறு ஷங்கரை கேட்டுக் கொண்டாராம். அத்தோடு சூப்பராக ஆடுகிறீர்கள் என்று ஷ்ரேயாவை பாராட்டவும் செய்தாராம். இதனால் மகிழ்ந்து போயுள்ள ஷ்ரேயாவுக்கு இன்னொரு சந்தோஷச் செய்தி வந்து சேர்ந்துள்ளது. தெலுங்கில் சத்ரபதி என்ற படத்தில் ஹீரோ பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஷ்ரேயா. இந்தப் படம் சமீபத்தில் அங்கு வெளியாகியது. இதுவரை இல்லாத புதுமையாக சத்ரபதி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதாம். 50 சென்டர்களில் 100 நாட்களைத் தாண்டி அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபாஸ் படம் எதுவுமே இதுவரை இந்த அளவுக்கு பிக் அப் ஆனதில்லையாம். எல்லாம் ஷ்ரேயாவின் மகிமை என்கிறார்கள் தெலுங்கு மணவாடுகள். ரஜினி பட ஹீரோயின் என்பதால், ஷ்ரேயாவைப் பார்த்து ரசிக்க கூட்டம் முண்டியடிக்கிறதாம். இதுவரை தெலுங்கில் ஒரு நடிகைக்காக படம் ஓடியது என்றால் விஜயசாந்திக்கு மட்டும்தான். அந்த ரெக்கார்டை சத்ரபதி தகர்த்து விடும் என்கிறார்கள் தெலுங்குப் படவுலகினர். சத்ரபதி இந்த அளவுக்கு ஹிட் ஆனது ஷ்ரேயாவுக்கும் பெரும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளதாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்காகத்தான் படம் ஓடுகிறது என்கிறார்கள். இதை நான் ஏற்க மாட்டேன். பிரபாஸும் நன்றாகத்தான் நடித்துள்ளார். ஆனால் நான் ரஜினியுடன் நடிக்கும் ஹீரோயின் என்பதால் எனக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. இந்த மரியாதையை நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சத்ரபதியை விட சிவாஜி பல மடங்கு பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டில் எனக்கு இரட்டை சந்தோஷம் கிடைக்கப் போவது ரொம்பப் பெருமையாக உள்ளது என்கிறார் புளகாங்கித ஷ்ரேயா.

சத்ரபதி ஷ்ரேயா ரஜினியுடன் நடிக்கும் சிவாஜி படம் இன்னும் கூட வெளியாகவில்லை. அதற்குள் ரஜினி ராசி ஷ்ரேயாவைத் தாக்க ஆரம்பித்து விட்டதாம். சிவாஜியில் ரஜினியுடன் நடிக்க எத்தனையோ நடிகைள் போட்டா போட்டி போட்டு கும்மியடித்துக் கொண்டிருந்த நிலையில் சத்தமே போடாமல் சைக்கிள் கேப்பில் ரஜினிக்கு ஜோடியாகியவர் ஷ்ரேயா. படத்தில் மேலும் இரண்டு ஹீரோயின்கள் என்று வதந்திகள் உலவி வந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிவாஜியில் கலக்க ஆரம்பித்துள்ளார். ரஜினியும், ஷ்ரேயாவும் ஆடிய பாடல் காட்சியைத்தான் முதலில் சுட்டார்கள். ஹைதராபாத்தில் நடந்த அந்த ஷூட்டிங்கின்போது, ஷ்ரேயாவின் நடனத் திறமையைப் பார்த்த ரஜினி, அவரையே அதிகம் போகஸ் செய்யுமாறு ஷங்கரை கேட்டுக் கொண்டாராம். அத்தோடு சூப்பராக ஆடுகிறீர்கள் என்று ஷ்ரேயாவை பாராட்டவும் செய்தாராம். இதனால் மகிழ்ந்து போயுள்ள ஷ்ரேயாவுக்கு இன்னொரு சந்தோஷச் செய்தி வந்து சேர்ந்துள்ளது. தெலுங்கில் சத்ரபதி என்ற படத்தில் ஹீரோ பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஷ்ரேயா. இந்தப் படம் சமீபத்தில் அங்கு வெளியாகியது. இதுவரை இல்லாத புதுமையாக சத்ரபதி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதாம். 50 சென்டர்களில் 100 நாட்களைத் தாண்டி அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபாஸ் படம் எதுவுமே இதுவரை இந்த அளவுக்கு பிக் அப் ஆனதில்லையாம். எல்லாம் ஷ்ரேயாவின் மகிமை என்கிறார்கள் தெலுங்கு மணவாடுகள். ரஜினி பட ஹீரோயின் என்பதால், ஷ்ரேயாவைப் பார்த்து ரசிக்க கூட்டம் முண்டியடிக்கிறதாம். இதுவரை தெலுங்கில் ஒரு நடிகைக்காக படம் ஓடியது என்றால் விஜயசாந்திக்கு மட்டும்தான். அந்த ரெக்கார்டை சத்ரபதி தகர்த்து விடும் என்கிறார்கள் தெலுங்குப் படவுலகினர். சத்ரபதி இந்த அளவுக்கு ஹிட் ஆனது ஷ்ரேயாவுக்கும் பெரும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளதாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்காகத்தான் படம் ஓடுகிறது என்கிறார்கள். இதை நான் ஏற்க மாட்டேன். பிரபாஸும் நன்றாகத்தான் நடித்துள்ளார். ஆனால் நான் ரஜினியுடன் நடிக்கும் ஹீரோயின் என்பதால் எனக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. இந்த மரியாதையை நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சத்ரபதியை விட சிவாஜி பல மடங்கு பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டில் எனக்கு இரட்டை சந்தோஷம் கிடைக்கப் போவது ரொம்பப் பெருமையாக உள்ளது என்கிறார் புளகாங்கித ஷ்ரேயா.

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியுடன் நடிக்கும் சிவாஜி படம் இன்னும் கூட வெளியாகவில்லை. அதற்குள் ரஜினி ராசி ஷ்ரேயாவைத் தாக்க ஆரம்பித்து விட்டதாம்.

சிவாஜியில் ரஜினியுடன் நடிக்க எத்தனையோ நடிகைள் போட்டா போட்டி போட்டு கும்மியடித்துக் கொண்டிருந்த நிலையில் சத்தமே போடாமல் சைக்கிள் கேப்பில் ரஜினிக்கு ஜோடியாகியவர் ஷ்ரேயா.

படத்தில் மேலும் இரண்டு ஹீரோயின்கள் என்று வதந்திகள் உலவி வந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிவாஜியில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

ரஜினியும், ஷ்ரேயாவும் ஆடிய பாடல் காட்சியைத்தான் முதலில் சுட்டார்கள்.

ஹைதராபாத்தில் நடந்த அந்த ஷூட்டிங்கின்போது, ஷ்ரேயாவின் நடனத் திறமையைப் பார்த்த ரஜினி, அவரையே அதிகம் போகஸ் செய்யுமாறு ஷங்கரை கேட்டுக் கொண்டாராம். அத்தோடு சூப்பராக ஆடுகிறீர்கள் என்று ஷ்ரேயாவை பாராட்டவும் செய்தாராம்.

இதனால் மகிழ்ந்து போயுள்ள ஷ்ரேயாவுக்கு இன்னொரு சந்தோஷச் செய்தி வந்து சேர்ந்துள்ளது. தெலுங்கில் சத்ரபதி என்ற படத்தில் ஹீரோ பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஷ்ரேயா. இந்தப் படம் சமீபத்தில் அங்கு வெளியாகியது.

இதுவரை இல்லாத புதுமையாக சத்ரபதி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதாம். 50 சென்டர்களில் 100 நாட்களைத் தாண்டி அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபாஸ் படம் எதுவுமே இதுவரை இந்த அளவுக்கு பிக் அப் ஆனதில்லையாம். எல்லாம் ஷ்ரேயாவின் மகிமை என்கிறார்கள் தெலுங்கு மணவாடுகள்.

ரஜினி பட ஹீரோயின் என்பதால், ஷ்ரேயாவைப் பார்த்து ரசிக்க கூட்டம் முண்டியடிக்கிறதாம். இதுவரை தெலுங்கில் ஒரு நடிகைக்காக படம் ஓடியது என்றால் விஜயசாந்திக்கு மட்டும்தான். அந்த ரெக்கார்டை சத்ரபதி தகர்த்து விடும் என்கிறார்கள் தெலுங்குப் படவுலகினர்.

சத்ரபதி இந்த அளவுக்கு ஹிட் ஆனது ஷ்ரேயாவுக்கும் பெரும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளதாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்காகத்தான் படம் ஓடுகிறது என்கிறார்கள். இதை நான் ஏற்க மாட்டேன். பிரபாஸும் நன்றாகத்தான் நடித்துள்ளார்.

ஆனால் நான் ரஜினியுடன் நடிக்கும் ஹீரோயின் என்பதால் எனக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது.

இந்த மரியாதையை நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சத்ரபதியை விட சிவாஜி பல மடங்கு பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த ஆண்டில் எனக்கு இரட்டை சந்தோஷம் கிடைக்கப் போவது ரொம்பப் பெருமையாக உள்ளது என்கிறார் புளகாங்கித ஷ்ரேயா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil