'காவியமான' படத்தில் விஜயுடன் ஜோடி சேர்வது மிகப் பெரிய சந்தோஷம்... ஸ்ருதி

சென்னை: சிம்புதேவன் இயக்கும் படத்தில் 'விஜய்யுடன் ஜோடி சேருவது, மிகப்பெரிய சந்தோஷம்' எனத் தெரிவித்துள்ளார் நடிகை சுருதிஹாசன்.

கத்தி படத்தைத் தொடர்ந்து விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாகக் கூறப்பட்டது. முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் ஸ்ரீதேவி நடிக்கிறார். வில்லனாக 'நான் ஈ' சுதீப் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் இன்னொரு நாயகியாக சுருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். இத்தகவலை சுருதிஹாசனே அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பூஜை...

பூஜை...

சுருதி தற்போது தமிழில் ‘பூஜை' படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, விஜய்-சிம்புதேவன் கூட்டணி படத்தில் இணைகிறார்.

டுவிட்டரில்...

டுவிட்டரில்...

விஜய்யுடன் சுருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. விஜய்யுடன் ஜோடி சேர்வது குறித்த தனது மகிழ்ச்சியை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ருதி.

ரொம்ப சந்தோஷம்...

ரொம்ப சந்தோஷம்...

அதில் அவர், ‘சிம்புதேவன் அடுத்து இயக்கும் படத்தில், விஜய் ஜோடியாக நான் நடிப்பது, மிகப்பெரிய சந்தோஷத்தை தந்திருக்கிறது.

கதையல்ல... காவியம்

கதையல்ல... காவியம்

இது, ஒரு காவியம் என்று சொல்லக்கூடிய அபூர்வமான கதையம்சம் கொண்ட படம். அதில், நான் தமிழ் பெண்ணாக வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2 நாயகிகள்...

2 நாயகிகள்...

இதன் மூலம், விஜயின் 58வது படமான இப்படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள் என்பது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X