கவலைப்படாதீங்க.. "நாயுடு" கண்டிப்பா வருவார்.. பிறகென்ன ஸ்ருதியே சொல்லியாச்சு!
Recommended Video

சென்னை: ஸ்ருதியே சொல்லி விட்டார்.. சபாஷ் நாயுடு கண்டிப்பாக வெளியாகுமாம்.
கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தின் முக்கிய அவதாரம் பல்ராம் நாயுடு. படத்திலேயே அதிகம் பேசப்பட்ட கேரக்டர் இதுதான். விடுவாரா மாஜி காதல் மன்னன்... இதையை லீடாக்கி புதிய படமாக மாற்றி விட்டார். அதுதான் சபாஷ் நாயுடு.

ஆந்திரத்து பிரம்மானந்தத்தையும் துணைக்கழைத்து சபாஷ் நாயுடுவை ஆரம்பித்தார். மகள் ஸ்ருதியையும் படத்தில் இணைத்தார்.. ஆஹா. புல் மீல்ஸ் எப்ப வரும் என்று ரசிகர்கள் காத்திருக்க நாயுடுவை ஆளைக் காணோம்.
இடையில் கமலுக்கு காலில் அடிபட படப்பிடிப்பு பாதியில் நின்றது. பிறகு தொடரவே இல்லை. இதனால் நாயுடு வருவாரா, வர மாட்டாரா என்பது கேள்விக்குறியாகி விட்டது. ஆனால் கவலைப்படாதீங்க, நாயுடு சூப்பராக வருவார் என்று ஸ்ருதி ஆறுதல் அளித்துள்ளார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில், அப்பாவுடன் நான் நடித்துள்ள முதல் படம் இது. நிச்சயம் இது வெளியாகும். அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் படம் இருக்கும். படம் கைவிடப்படவில்லை. திட்டமிட்டபடி வெளியாகும் என்று கூறியுள்ளார் ஸ்ருதி.
படத்தில் கமல்ஹாசனின் இன்னொரு மகளான அக்ஷரா ஹாசன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். கமல்ஹாசன்தான் இயக்குநர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ராதாரவி ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











