நீங்களா என் கல்யாணத்துக்கு கரண்ட் பில் கட்டப் போறீங்க.. திடீரென டென்ஷனான ஸ்ருதிஹாசன்.. என்னாச்சு?

சென்னை: கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துவரும் அவர் சாந்தனு என்பவரை காதலித்தார். ஆனால் அந்தக் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. அதனையடுத்து ஸ்ருதி கொடுத்த ஒரு பேட்டியில், ஒருவரை காதலிக்க பிடிக்கும். ஆனால் திருமணம் பற்றி யோசிக்கமாட்டேன் என்று ஓபனாக கூறியிருந்தார். இந்தச் சூழலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் திருமணம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் கமல் ஹாசன். திரையுலகில் பல திறமைகளை கொண்ட அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். வாணி கணபதியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்தார் கமல். அந்தத் தம்பதிக்கு ஸ்ருதியும், அக்‌ஷராவும் பிறந்தார்கள். ஸ்ருதிஹாசன் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞர். பாடல்கள் பாடுவது, இசையமைப்பது போன்றவற்றில் ஆர்வம் உடையவர்.கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஸ்ருதிதான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

shruthi haasan kamal haasan

நடிகை: இசை கலைஞராக இருந்த அவர் சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஸ்ருதி ஹாசனுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் 3 உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அசத்தினார். தமிழில் எப்படி அவர் தனது திறமையை அசால்ட்டாக நிரூபித்தாரோ அதேபோல் மற்ற மொழிகளிலும் நிரூபித்து புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று காட்டினார்.

அடுத்த படங்கள்: அவர் கடைசியாக தெலுங்கில் சலார் 2 படத்தில் நடித்தார். அந்தப் படத்தை கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. ஸ்ருதிக்கும் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்ததாக சலார் 2, கூலி, ட்ரெய்ன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவற்றில் கூலி படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிப்பதால் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதியின் காதல்: முதலில் நடிகர் சித்தார்த்தை இவர் காதலிப்பதாகவும் இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும் கிசிகிசுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இதில் எல்லாம் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அதேசமயம் இவர் சாந்தனு என்பவரை தீவிரமாக காதலித்துவந்தார். தனது தந்தையிடமும் அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்தக் காதல் பாதியில் பிரேக்கப் ஆனது. அதற்கு பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கோபமான ஸ்ருதி: இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் ஒரு செய்தியாளர் உங்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டார். அதற்கு கோபமான ஸ்ருதி ஹாசன், "ஏன் எனது திருமணத்துக்கு கரண்ட் பில் கட்டப்போறீங்களா?.. சாப்பாடு போடப்போறீங்களா?.. இல்லை பத்திரிகையாவது அடிச்சு தரப்போறீங்களா?.. இவற்றில் எதுவுமே நீங்கள் செய்யப்போறது இல்லை. பிறகு எனக்கு எப்போ கல்யாணம் என்று கேட்காதீர்கள்" என்று அதிரடியாக பதிலளித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X