விருது விழாவுக்கு வந்து வில்லங்கம் செய்த ஸ்ருதிஹாசன்
சென்னை: சென்னை வணிகவளாகம் ஒன்றில் எந்தப் பொருளையும் வாங்காமல் விற்பனையாளரை கடுப்படித்த ஸ்ருதி, அந்த விற்பனையாளருடன் சண்டை போட்டுவிட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடினார் ஸ்ருதிஹாசன்.
அந்நிகழ்ச்சிக்காக வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் ஒத்திகை முடிந்த பின்னர் அருகில் உள்ள வணிகவளாகத்திற்குச் சென்றார்.

மேக் அப் செட்
அங்கிருந்த அழகுசாதன கடைக்குச் சென்று ஷோகேஸில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் எடுக்கச் சொல்லி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

சும்மா டைம் பாஸ்
அவர் கேட்டதை எல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கின்றனர் ஊழியர்கள். ஒவ்வொரு பொருட்களையும் பார்த்துவிட்டு வாங்காமல் திருப்பிக் கொடுத்திருக்கிறார். இப்படி கடையில் உள்ள பெரும்பாலான பொருட்களை எடுக்கச்சொல்வதும், வாங்கிப் பார்த்துவிட்டு வேண்டாம் என திருப்பிக் கொடுப்பதுமாகவே இருந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

ஊழியர்கள் கோபம்
இதனால் கடுப்பான ஊழியர்கள் பின்னர் ஸ்ருதி கேட்ட பொருட்களை எல்லாம் ஸ்டாக் இல்லை என்று சொல்லி இருக்கின்றனர்.

கூடிய கூட்டம்
பொருட்களை வைத்துக்கொண்டே இல்லை என்று சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ஸ்ருதிஹாசன் கடும் ஆத்திரமடைந்து கடை ஊழியர்களை திட்டித்தீர்த்திருக்கிறார். அவர் போட்ட சத்தத்தில் ஷாப்பிங்மாலில் பெருங்கூட்டமே கூடிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











