ஆமா நான் சிங்கிள்தான்.. சந்தோஷமா இருக்கேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த ஸ்ருதிஹாசன்

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கிவரும் அவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அவர்கள் இரண்டு பேருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் அளித்த பதில் ட்ரெண்டாகியுள்ளது.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

Shruthi Haasan Opens up About Her Relationship Status

தனுஷுடன் ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

கடைசியாக நடித்த படம்: தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும் லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார்.

ஹாலிவுட் வாய்ப்பு: இதனையடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருந்தர் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்தப் படத்திலிருந்து அவர் விலகியிருக்கிறார். இதற்கிடையே அவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவந்தார். அவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்துவந்த ஸ்ருதி; கமல் ஹாசனை சந்திக்கவும் வைத்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை பிரேக் அப் ஆகிவிட்டது.

ஆமா சிங்கிள்தான்: இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் லைவ்வில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஸ்ருதியின் ரிலேஷன்ஷிப் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்ருதி, 'இந்தக் கேள்விக்கு பதிலளிக்க எனக்கு மகிழ்ச்சியாக இல்லைதான். ஆனால், இப்போது நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன். என்னுடைய வேலையில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன். வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன்'என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X