என் வாழ்க்கையில் அவங்க வந்த பிறகு.. நண்பன்தான் காரணம்.. உருகும் ஸ்ருதி ஹாசன்

சென்னை: பின்னணி பாடகியாக பயணத்தை ஆரம்பித்து ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஸ்ருதி ஹாசன். அடுத்ததாக அவரது நடிப்பில் ட்ரெய்ன் திரைப்படம் வெளியாகவுள்ளது. அப்படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசிய விஷயம் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றிருக்கிறது.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கும் முன்னதாகவே ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். அதேபோல் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாவதற்கு முன்னதாகவே ஹிந்தியில் அவர் நடிப்பு பயணத்தை தொடங்கியிருந்தார். இது ஒருபக்கம் இருக்க இசை மீதும் அதீத ஆர்வம் உடைய ஸ்ருதி, கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்துக்கு இசையும் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruthi Haasan Opens Up on Spiritual Journey Varahi Amman Entered My Life
Photo Credit:

பிஸி ஹீரோயின்: திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி தனி பாடல்களுக்கும் அவர் இசையமைத்தும், பாடியும் வருகிறார். அதேபோல் ஹீரோயினாகவும் செம பிஸியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பறந்து பறந்து நடித்துவரும் அவர்; தமிழில் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் சம்பாதித்திருக்கிறது. நிச்சயம் ஸ்ருதிக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

பவழ மல்லி: அதேபோல் சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியாகி சென்சேஷனல் ஆன 'பவழ மல்லி' பாடலையும் ஸ்ருதி பாடியிருந்தார். அது பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. ஒருபக்கம் நடிப்பு, மறுபக்கம் இசை என இரட்டை குதிரைகளில் சூப்பராக சவாரி செய்யும் அவரை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். மேலும் தந்தை போன்றே பல துறைகளில் கெத்து காட்டிவருகிறாரே என்றும் ரசிகர்கள் புகழ்ந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தெலுங்கில் அவர் நடிப்பில் சலார் 2 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.

ரிலேஷன்ஷிப் சர்ச்சைகள்: கமல் போன்றே இவரும் ரிலேஷன்ஷிப்பில் சர்ச்சைகளை சந்தித்தார். சில நடிகர்களுடன் அவரை இணைத்து வைத்து கிசுகிசுக்கள் எழுந்தன. அதனையடுத்து சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்தார். இரண்டு பேரின் காதலும் சில வருடங்களிலேயே முடிந்துவிட்டது. இப்போது சிங்கிளாகவே இருக்கிறார் ஸ்ருதி. இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "எனது வாழ்க்கையில் சமீபத்தில்தான் வராஹி அம்மன் வந்தார்கள்.

அதை நம்புகிறேன்: நாம் மட்டும் இல்லை. கடவுள்களும் நம்மை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நம்புகிறேன். சென்னையில் இருக்கும் எனது நண்பன் பதிர் என்பவர் மூலம்தான் அது நடந்தது. நீ கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாய். வா கோயிலுக்கு போகலாம் என்று அழைத்து சென்றார். அது சின்ன கோயில்தான். ஆனால் ரொம்ப அழகாக இருக்கும். உள்ளே போனவுடனேயே ஒரு பக்தியை நான் உணர்ந்தேன். சின்ன கோயில் ஆடம்பரம் இருக்காது. விஐபி வரிசையும் இல்லை. உண்மையிலேயே எனது வாழ்க்கையில் வராஹி அம்மன் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X