நான் என்ன உன் அம்மாவா?.. அத்துமீறியவரை பேச்சாலேயே அடக்கிய ஸ்ருதிஹாசன்.. செம போல்டு
மும்பை: நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பாடகி, நடிகை என பல திறமைகளை கொண்டிருப்பவர். அடுத்ததாக அவரது நடிப்பில் ட்ரெய்ன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதனை மிஷ்கின் இயக்கியிருக்கிறார். மேலும் சில படங்களுக்கான கதையை அவர் கேட்டுவருவதாக தெரிகிறது. தமிழில் அவர் கவனம் செலுத்தினாலும் பெரும்பாலும் மும்பையில்தான் இருக்கிறார். இந்நிலையில் அங்கு தன்னை ஒரு மாதிரி பேசியவருக்கு ஸ்பாட்டிலேயே பதிலடி கொடுத்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் பாடல் பாடி கவனத்தை ஈர்த்தார். அதற்கும் முன்னதாகவே நிறைய சிங்கிள் பாடல்களை இசையமைத்து ஆல்பமாக வெளியிட்டிருக்கிறார்.சொல்லப்போனால் ஆல்பம் கலாசாரம் தமிழ் இசையில் பெருகுவதற்கு ஸ்ருதியின் செயல்களும் ஒரு காரணம்தான். நிலைமை இப்படி இருக்க பாடும் திறமையோடு அழகும் அவரிடம் இருந்தது. எனவே அவரை ஏ.ஆர்.முருகதாஸ் தனது ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.

படம் சூப்பர் ஹிட்: அந்தப் படம் எதிர்பார்த்தபடி மெகா ஹிட்டாகவில்லை என்றாலும் சூப்பர் ஹிட் என்ற ரீதியில் ரிசல்ட்டை பெற்றது. ஸ்ருதியின் நடிப்புக்கும் அப்ளாஸ் கிடைத்தது. அதிலும், ஒரு கான்ஃபரன்ஸ் மீட்டிங் சீனில் அவரது நடிப்புக்கு பலமாகவே கைத்தட்டல்கள் கிடைத்தன. அதனையடுத்து தனுஷுக்கு ஜோடியாக 3 படத்தில் நடித்தார். அதில் அவருடன் கொஞ்சம் ஓவராகவே நெருக்கம் காட்டியிருந்தார். அந்த சமயத்தில் இரண்டு பேரை இணைத்து வைத்து எக்கச்சக்க வதந்திகள் பரவின. அதெல்லாம் பொய் என காலம் நிரூபித்தது.
பிஸியான நடிகை: 3 படமும் ஹிட்தான். இதற்கிடையே ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் அவருக்கு ஆஃபர்கள் கிடைத்தன. அந்த மொழிகளிலும் சூப்பராக நடித்து தனக்கான மார்க்கெட்டை உயர்த்தினார். தெலுங்கும், ஹிந்தியில் எல்லாம் கிளாமர் ரோல்கள் செய்வதற்கும் அவர் தயங்கவில்லை. தொடர்ச்சியாக பல வெரைட்டி ரோல்களில் நடித்ததால் வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அமைந்தன. அப்போதிருந்து அவருக்கு தமிழ் சினிமாவின் மீதான கவனம் குறைந்தது. அவ்வப்போது நடிப்பது, சிங்கிள் பாடல் வெளியிடுவது என இருக்கிறார். சமீபத்தில் ட்ரெண்டான பவழ மல்லி பாடலைகூட அவர்தான் பாடியிருந்தார்.
ரிலேஷன்ஷிப் பிரச்னைகள்: தந்தை கமல் போன்றே ஸ்ருதியின் ரிலேஷன்ஷிப்களும் நிறைய கிசுகிசுக்களை சந்தித்திருக்கின்றன. இவரும் சில பிரேக்கப்புகளை சந்தித்திருக்கிறார். கடைசியாக அவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை தீவிரமாக காதலித்துவந்தார். கமலிடம் அறிமுகமும் செய்து வைத்தார். ஆனால் சில வருடங்களிலேயே பிரேக்கப் ஆகிவிட்டது. இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறார். திருமணத்தின் மீது தனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரே போடாக போட்டிருந்தார். உடனே இவரையும், கமலையும் கம்ப்பேர் செய்தும் பேச தொடங்கிவிட்டார்கள்.
அடக்கிய ஸ்ருதி: இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. மும்பையில் அவர் சென்றுகொண்டிருக்கையில் ரசிகர் ஒருவர், 'ஹாய் அம்மா' என்று கூறினார். உடனே ஸ்ருதிஹாசன், 'ஹே நான் என்ன உன் அம்மாவா?' என காட்டமாக கேட்டார். ஸ்ருதியிடமிருந்து அப்படி ஒரு ரியாக்ஷன் வந்ததையடுத்து அந்த நபர் கப் சிப் என்று ஆகிவிட்டார். ஸ்ருதிஹாசனின் கரியரை பொறுத்தவரை அடுத்ததாக அவரது நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ட்ரெய்ன் திரைப்படம் இந்த வருடத்துக்குள் ரிலீஸாகிவிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
