எனக்கு அப்படி இருக்கத்தான் பிடிக்கும்.. இதுவரை பார்க்கவில்லை.. மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

சென்னை: கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் தமிழில் தொடர்ந்து நடித்தார். அதனையடுத்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். சூழல் இப்படி இருக்க சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவந்த அவர் திடீரென அவருடன் பிரேக் அப் செய்துகொண்டார். தற்போது சிங்கிளாக இருக்கும் அவர் ரிலேஷன்ஷிப் குறித்து அளித்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கமல் ஹாசன் - ரேகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதி ஹாசன். இசையின் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார். அதனையடுத்து கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். சூழல் இப்படி இருக்க சூர்யாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார்.

shruthi haasan tamil cinema kollywood

பிஸியான நடிகை: தமிழில் அவர் தொடர்ந்து நடித்துவந்த சூழலில் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது தடத்தை பதித்தார். எந்த மொழியில் நடித்தாலும் அங்கு தனது திறமையை செம்மையாக வெளிப்படுத்தியதன் காரணமாக கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் என்ற அடையாளம் தொலைந்து நடிகை ஸ்ருதி ஹாசன் என்ற தனி அடையாளம் கிடைத்தது. அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை.

காதல் பிரேக் அப்: பிஸியாக நடிப்பு, இசை என்று இயங்கிவரும் அவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவந்தார். மேலும் அவரை தனது தந்தையான கமல் ஹாசனை நேரில் சந்திக்கவும் வைத்தார் ஸ்ருதி. விரைவில் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த சூழலில் அண்மையில் காதல் உறவிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரிலேஷன்ஷிப் குறித்து ஸ்ருதி ஹாசன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஸ்ருதி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் எப்போதும் காதலை விரும்புகிறேன். ரிலேஷன்ஷிப்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். அது ஏன் என்றெல்லாம் எனக்கு தெரியாது. என்னை யாரிடமாவது நான் இணைத்துக்கொள்வேன். எனது வாழ்க்கையில் இவர்தான் ஸ்பெஷல் என்ற ஒருவரை இதுவரை நான் பார்த்தது இல்லை என்பதுதான் உண்மை. திருமண உறவில் வெற்றி பெற்றவர்கள் எனது நட்பு வட்டாரத்தில்கூட இருக்கிறார்கள்தான்.

காதல் என்னும் சக்தி: இந்த உலகத்தில் காதல் சக்தி வாய்ந்தது மட்டும் இல்லை. அது நம்மை இயக்கும் தன்மை உடையது. வேலையில், செல்ல பிராணிகளிடத்தில், குழந்தையிடத்தில்கூட காதல் இருக்கலாம். பிரேக் அப்புகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நம்மை நாமே ஃபிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம்தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X