அப்பா, அம்மாவின் பிரிவு.. வலியை கொடுத்தது.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

சென்னை: ஸ்ருதி ஹாசன் நடிகையாக மட்டுமின்றி பாடகி, இசை கலைஞர் போன்ற பன்முகங்களை கொண்டவர் ஆவார். அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. சூழல் இப்படி இருக்க ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் தனது தாயும், தந்தையும் பிரிந்தபோது தனக்கு ஏற்பட்ட வலிகள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் உன்னை போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். பிறகு ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து 3, பூஜை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். அதனையடுத்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்தார் அவர். இதற்கிடையே சாந்தனு என்பவரை காதலித்துவந்த அவர் அவருடன் பிரேக் அப் செய்துகொண்டார். அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

kamal haasan shruthi haasan

ஸ்ருதியின் பேட்டி: அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தை கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியானாலும் படம் பெரிதாக ரெஸ்பான்ஸை பெறவில்லை. ஸ்ருதி ஹாசனுக்கும் படத்தால் பெரிதாக எந்த பெயரும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தனது தாய், தந்தை பிரிந்தபோது ஏற்பட்ட வலி குறித்து பேசியிருக்கிறார்.

அழகான குடும்பம்: நான் மிகவும் அழகான குடும்பத்தில்தான் பிறந்தேன். கலை உணர்வு மிகுந்த புத்திசாலித்தனமான பெற்றோர்கள் எனக்கு கிடைத்தார்கள். கடவுளின் அருளால் நிறைய வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அதனுடைய மறுபக்கத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது பெற்றோர் பிரிந்தபோது எல்லாமே மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

நிதி சுதந்திரம்: அந்த சமயத்தில்தான் நிதி சுதந்திரம் உள்ளிட்டவற்றின் மதிப்பை என்னால் உணர முடிந்தது. குறிப்பாக ஒரு மகளாக இருந்து அம்மா தன்னுடைய திருமண உறவிலிருந்து வெளியேறியதை பார்த்து ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் நன்றாகவே புரிந்துகொண்டேன். அதேசமயம் பெற்றோர் பிரிந்தது எனக்கு வலியையும் கொடுத்தது. குழந்தைகள் மட்டுமில்லை அவர்களும் இதனை உணரத்தான் செய்கிறார்கள்.

சாதாரண விஷயம்: இந்த விஷயம் இப்போது எல்லோரின் வீடுகளிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் இன்றும் சமூகத்துக்காகவும், தங்களது பிள்ளைகளுக்காகவும் பெற்றோர்கள் ஒரே வீட்டில் இருக்கும் நிலைமையும் இருக்கின்றன. சில நேரங்களில் அந்த வீடுகளில் நிறைய வலி இருக்கிறது"என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X