ரஜினியுடன் கூலி.. எப்படி இருக்கு தெரியுமா அனுபவம்.. மனம் திறந்து பேசிய ஸ்ருதி ஹாசன்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. குறிப்பாக அவரது திரைப்படங்களில் லியோதான் சுமார் படமாகவும், ட்ரோலுக்கு உள்ளான படமாகவும் அமைந்தது. சூழல் இப்படி இருக்க அவர் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். அந்தப் படத்தில் ரஜினியுடன் அமீர் கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இப்போது டாப் இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக நான்கு ஹிட் படங்களை கொடுத்தார். இதன் காரணமாக அவரது கிராஃப் எங்கேயோ சென்றுகொண்டிருந்தது. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் தவம் இருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இந்த சின்ன வயதிலேயே இப்படி ஒரு உயரத்துக்கு சென்றிருக்கும் லோகேஷை பார்த்து ரசிகர்களும், திரைத்துறையினரும் ஆச்சரியம்தான் பட்டிருக்கிறார்கள்.

சறுக்கிய லியோ: வரிசையாக நான்கு ஹிட் படங்களை கொடுத்த அவர் ஐந்தாவதாக விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். ஏற்கனவே அவர்கள் இணைந்து மாஸ்டர் என்ற ஹிட் படத்தை கொடுத்ததால் இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் போகவில்லை. மேலும் படத்தின் பிளாஷ்பேக் போர்ஷனை எல்லாம் வைத்து செய்துவிட்டார்கள் ரசிகர்கள். அதுமட்டுமின்றி லோகேஷின் முத்திரையான எல்சியூவும் இந்தப் படத்தில் பெரிதாக எடுபடவில்லை.
ரஜினியுடன் கூலி: எனவே அடுத்த படத்தில் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்தவகையில் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். இதில் ரஜினியுடன் அமீர் கான், உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். தேவா என்ற கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் இதில் ஏற்றிருக்கிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் சிங்கிளின் ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினியின் நடனம் அட்டகாசமாக இருந்தது.
ஸ்ருதி ஹாசன் பேட்டி: இந்நிலையில் கூலி படத்தில் நடித்தது குறித்து ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கிறிஸ்துமஸ் தினத்திலும் கூலி ஷூட்டிங்கில்தான் இருந்தேன். கடந்த வருட கிறிஸ்துமஸுக்கு தெலுங்கு படமாக கிராக் ஷூட்டிங்கில் இருந்தேன். பிறந்தநாள் மற்றும் பண்டிகை நாட்களில் ஷூட்டிங்கில் இருந்தால் நன்றாகவும் உற்சாகமாகவும் இருக்கும். லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை.
ரஜினியுடனான அனுபவம்: அவரது படங்கள் எப்போதும் எனக்கு பிடிக்கும். அது கூலி படத்தில் நிறைவேறியிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிப்பது எனக்கு சிறந்த அனுபவம். அவரிடமிருந்து அவ்வளவு விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது" என்றார். முன்னதாக ரஜினிகாந்த்தின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதன் காரணமாக கூலி படத்தை எப்படியாவது மெகா ப்ளாக் பஸ்டராக கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட ஆசையில் இருக்கிறார்கள். நிறைவேற்றுவாரா லோகேஷ் கனகராஜ்?


Click it and Unblock the Notifications











