சங்கராந்தி ஸ்பெஷல்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் ஸ்ருதி ஹாசன்!

சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

இவர் 2022ம் ஆண்டு லாபம் திரைப்படத்தில் கிளாரா என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் தனக்கு PCOD பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். இந்தநிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தயாராகிவரும் 'வால்டர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன.

Shruthi Hasan’s double treat to fans this Pongal

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்திருக்கும் 'வால்டர் வீரய்யா' என்ற படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாக இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' எனும் படத்திலும் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இதனை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதனிடையே நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கே. ஜி. எஃப்' புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், 'தி ஐ' எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: shruti haasan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X