என் பின்னால 16 லட்சம் பேர்...ஃபிரண்ட்ஸுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்
சென்னை : நடிகர் கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், பாடகி, மாடல் என பல முகங்களைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பூஜை, ஏழாம் அறிவு, சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் ஆல்பம் இயற்றுவது போன்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்களை ஸ்ருதி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை சமீபத்தில் 16 லட்சத்தை எட்டியது.
இதற்காக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து 2 நாட்களுக்கு முன் ஒரு வீடியோவை அவர் பதிவிட்டார். தொடர்ந்து லைவ் வீடியோவாகவும் காரில் சென்றபடி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இது தனக்கு மிகப் பெரிய ஊக்கம் அளித்திருப்பதாகவும் அவர் பேசி இருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார் ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி பதிவிட்ட இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











