Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம்: ஸ்ருதிஹாசன் டாப்
தீபாவளி நெருங்க நெருங்க இனி தொலைக்காட்சிகளில் ஜவுளிக்கடை விளம்பரம்தான் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பாகும்.
பிரபல நடிகைகள்... புதுமுக நடிகைகள் என எல்லோரும் தீபாவளி பர்சேஸ் செய்ய கூப்பிடுவார்கள்.
பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பர படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளது. ஆனால் அதற்கு அவர் கேட்ட தொகை ஒரு கோடி ரூபாயாம். அதற்கும் சரி என்று சொல்லி அவரையே புக் செய்துவிட்டனராம்.
ஏனெனில் இன்றைக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கும் ஒரே நடிகை என்றால் அது ஸ்ருதிஹாசன் தான்
பிஸியான ஸ்ருதிஹாசன்
தமிழில் பூஜை, விஜய் படம் இந்தியில் பல படங்கள் என பிசியாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
பிராண்ட் அம்பாசிடர்
தற்போது அகில இந்திய அளவில் இன்னொரு கெளரமும் கிடைத்துள்ளது.அகில இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும்
இந்த நிறுவனத்தின் தென்னிந்திய அம்பாசிடராக ஏற்கனவே இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியா முழுவதற்குமான அம்பாசிடராக மாறியுள்ளார்.
ஷூ கம்பெனிக்கும்
ஸ்ருதிஹாசன் ஏற்கனவே ஜெர்மனி நிறுவனத்தின் ஷூ கம்பெனி ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.