டோலிவுட்டின் 'தங்க மகள்' ஸ்ருதிஹாசன்... தெலுங்கு ரசிகர்கள் தேர்வு!
தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு ஒன்றை நடத்தியது. ஆந்திரா ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு அமோக வாக்களித்து தங்களின் தங்கமகளாக தேர்வு செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் தடுமாறிய ஸ்ருதி
நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் லக் இல்லாத நடிகை என்ற பெயரினைப் பெற்றார்.

கை கொடுக்காத சினிமா
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்தும் எதுவுமே கைகொடுக்கவில்லை. ஆனால் 2012ல் அவர் பவன்கல்யானுடன் நடித்த கப்பார் சிங் திரைப்படம்தான் ஸ்ருதிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கவர்ச்சிப்புயலான ஸ்ருதி
இந்த வருடத்தில் இவர் நடித்து வெளிவந்த 'எவடு, ரேஸ் குர்ரம்' ஆகிய படங்களில் ஸ்ருதியின் தோற்றமும், கவர்ச்சியும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. படத்துக்குப் படம் கிளாமரில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்களின் தேர்வு
சமீபகாலமாக தனது கிளாமரான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசனை முதலிடத்தில் தேர்வு செய்துள்ளனர்.

தமன்னா, ஸ்ரேயா
இந்த வாக்கெடுப்பில் தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள்.

கைநிறைய படங்கள்
தற்போது ஸ்ருதி தமிழில் ஒரு படத்திலும் ஹிந்தியில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் அதிக விரும்பத்தக்க நாயகியாக தேர்வானது பற்றி ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நான் அழகானவள்
"வெறும் லிப்ஸ்-டிக்கும், மேக்கப்பும் மட்டுமே நம்மை அழகாகக் காட்டி விடாது. நாம் யார் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் எனது தோற்றம், இதுதான் எனது அழகு என நான் உணர்ந்துள்ளேன், அதை வைத்து நான் மகிழ்ச்சிகரமாக இருக்கிறேன்.

நம்பிக்கைதான் அழகாக்கும்
இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாலே அதுவே நம்பிக்கையாக மாறி நம்மை அழகாக வைத்துக் கொள்ளும். நம்மை நாமே செக்ஸியாக உணர வேண்டும், செக்ஸியாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

அழகின் ரகசியம்
ஆடைகள் நம்மை அணியக் கூடாது, ஆடைகளை நாம்தான் அணிந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு அழகாகவும் இருக்கும், என்ன நடந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள்," என தன் அழகின் ரகசியத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார் ஸ்ருதிஹாசன்.

இந்தி, தெலுங்கில் வரவேற்பு
ஸ்ருதிஹாசனின் நடிப்பு இந்தி, தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது. விரும்பும் கதாநாயகியாகவும் அவர் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளார். எனவேதான் டோலிவுட் ரசிகர்கள் தங்கமகளாக ஸ்ருதியை தேர்வு செய்துள்ளனர் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications











