கமல்-ரஜினி அரசியல் இணைப்பு.. அப்பாவைப் போலவே தெளிவாக குழப்பி கருத்துக் கூறிய ஸ்ருதிஹாசன்!
கமல்-ரஜினி அரசியல் இணைப்பு பற்றி ஸ்ருதிஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: கமல் - ரஜினி அரசியல் இணைப்பு பற்றி நடிகையும், கமலின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார்.
காதல் முறிவிற்குப் பின் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியுடன் லாபம் மற்றும் திரெட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோவையில் தனியார் செல்போன் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ஸ்ருதி. அப்போது அவரிடம், 'கமல் - ரஜினி அரசியல் இணைப்பு பற்றி' கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'கமல்-ரஜினி அரசியல் இணைப்பு குறித்து தனக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை' எனப் பதிலளித்துள்ளார் ஸ்ருதி.
மேலும், தனது தந்தை கமலின் அரசியல் முடிவுகள் அனைத்திற்கும் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி எதிர்காலத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் ஆல்பம் பாடல்கள் தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளதாகவும் ஸ்ருதி மற்றொரு கேள்வி பதிலளித்தார்.
உங்களின் நான், இயக்குநர் பாலச்சந்தர் சிலைத் திறப்பு விழா என அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளில் ரஜினியும், கமலும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் தமிழக அரசியலில் இணைந்து செயல்படுவார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











