வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை ஸ்ருதி நாராயணன் வெளியிடுவதா?.. பத்திரிகையாளர் சந்திப்பில் பரபர!

சென்னை: கடுக்கா படக்குழு சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணனை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து அந்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை ஆபாச பட வீடியோ சர்ச்சையில் சிக்கிய ஸ்ருதி நாராயணன் வெளியிடுவதா? என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப சர்ச்சை வெடித்தது.

விஜய் டிவியில் இருந்து ஏகப்பட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்ததை போல சில நடிகைகளும் அவ்வப்போது வந்துக் கொண்டுதான் இருக்கின்றனர். விஜய் டிவி தொடர்களில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் ஷிவானி நாராயணன் வந்து பல படங்களில் நடித்தார். லாஸ்லியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

Shruthi Narayanan released Kadukka movie Velu Nachiyar poster stirs some controversy

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த ஸ்ருதி நாராயணன் சமீப காலமாக சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது கடுக்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ருதி நாராயணன் பங்கேற்றுள்ளார்.

ஸ்கூட்டி பரிசு: 12ம் வகுப்பு கடைசி தேர்வுக்கு செல்ல காத்திருந்த நிலையில், பேருந்து நிற்காமல் போக ஓடிச்சென்று ஏறி அந்த பேருந்தில் இடம்பிடித்து தேர்வு எழுதி பாஸ் ஆன மாணவி சுஹாசினிக்கு கெளரவம் செய்யும் விதமாக அவருக்கு ஸ்கூட்டி ஒன்றை கடுக்கா படக்குழுவினர் வழங்கினர். விஜய் கெளரிஷ் தயாரிப்பில் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக 'கடுக்கா' உருவாகி வரும் நிலையில், ஒவ்வொரு பெரும் தலைவர்களின் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை வெளியிட்ட ஸ்ருதி நாராயணன்: ஏற்கனவே பெரியார் ஈ.வெ. ராமசாமியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு பப்ளிசிட்டி செய்த நிலையில், இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் போஸ்டரை சின்னத்திரை மற்றும் சில்வர் ஸ்க்ரீன் என கலக்கி வரும் ஸ்ருதி நாராயணனை வைத்து படக்குழு வெளியிட்டது. கடுக்கா படத்துக்கு எப்போதுமே சப்போர்ட் செய்ய தான் ரெடியாக இருப்பதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ருதி நாராயணன் தெரிவித்தார்.

ஸ்ருதி நாராயணன் ஏன்?: வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை வெளியிட உங்களுக்கு வேறு ஆளே கிடையாதா? அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் அவருடைய போஸ்டரை வெளியிட தவறான முறையில் பிரபலமான ஸ்ருதி நாராயணன் தான் கிடைத்தாரா? என ஒரு பத்திரிகையாளர் அங்கேயே கேள்வி எழுப்ப அந்த இடமே பரபரப்படைந்தது. ஆனால், பெண்ணுரிமையை பேசும் படமாக கடுக்கா படம் உருவாகி வருகிறது என்றும் ஏதோ ஒரு ட்ராப்புக்குள் மாட்டிக் கொண்ட ஸ்ருதி நாராயணன் குறித்து தவறாக எண்ண வேண்டாம் என்றும் தொடர்ந்து அவருக்கு உறுதுணையாக கடுக்கா படக்குழு இருக்கும் என்றும் தயாரிப்பாளர் விஜய் கெளரிஷ் அந்த பத்திரிகையாளரின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சை வீடியோ: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் மற்றும் மாரி தொடர்கள் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி நாராயணன். விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'கட்ஸ்' எனும் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக விஜய் கெளரிஷ் தயாரிப்பிலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக விஜய் கெளரிஷ் தெரிவித்துள்ளார். ஆபாச வீடியோ வெளியான போது அது ஏஐ வீடியோ என்று கூறினார். அதன் பின்னர் தொடர்ந்து அடுத்த வீடியோ ஒன்று வெளியானதும் 12 படங்களை இயக்கிய இயக்குநர் பார்த்த சதி வேலை இது என்றும் ஸ்ருதி நாராயணன் பேசியிருந்தார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X