பரபரக்க வைக்கும் ஸ்ருதியின் 'ரேஸ் குதிரை' போஸ்... !

By Sudha

ஹைதராபாத்: ஸ்ருதி என்றாலே பரபரப்பு என்பது நிரந்தரமாகி விட்டது போல. சமீபத்தில்தான் அவரது டிடே படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது. இந்த நிலையில் அடுத்த பரபரப்புக்கு அவர் அஸ்திவாரம் போட்டு ஜம்மென்று அதன் மீது அமர்ந்திருக்கிறார்...

இந்த செய்தியும் கூட அவர் அமர்ந்துள்ளது குறித்துத்தான். ரேஸ் குர்ரம் என்ற படத்திற்காக அவர் கொடுத்துள்ள அமர்க்களமான சிட்டிங் ஸ்டைல்தான் இப்போது புதிய பரபரப்புக்கான விதையாகும்.

இந்தப் படத்திற்காக அவர் ஹீரோ அல்லு அர்ஜூன் மடி மீது ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் ஸ்டில் ஆந்திரப் பிரதேசத்தை அலறடித்து வருகிறதாம்.

டி டே

டி டே

டிடே படத்தில் ஸ்ருதி ஏற்றிருந்த வேடம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அந்தப் படத்தை தமிழுக்கும் கொண்டு வந்தபோது டென்ஷனாகி விட்டா். எதிர்த்தார்.

அதை விட இது பயங்கரமா இருக்கே

அதை விட இது பயங்கரமா இருக்கே

தற்போது டிடேயை விட பெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது அவர் தெலுங்கில் நடித்துள்ள ரேஸ் குர்ரம் என்றம் படம்.

குர்ரம்னா குதிரை...

குர்ரம்னா குதிரை...

ரேஸ் குர்ரம் என்றால் ரேஸ் குதிரை என்று அர்த்தம். அல்லு அர்ஜூன்தான் ஹீரோ. ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஷாமும் இருக்கிறார். சலோனி அஸ்வனியும் இருக்கிறார்.

அக்கா சுஹாசினியும்...

அக்கா சுஹாசினியும்...

அதேபோல படத்தில் ஸ்ருதியின் அக்கா சுஹாசினியும் இருக்கிறார்.

ஆசன போஸ்

ஆசன போஸ்

மேட்டர் என்னவென்றால், ஒரு பாடலில் ஹீரோ அல்லு மீது ஸ்ருதி செம ஸ்டைலாக, கவர்ச்சிகரமாக சம்மனக்கால் போட்டு அமர்ந்திருப்பதுதான். இந்த போஸ்தான் தற்போது சூட்டைக் கிளப்பியுள்ளதாம் ஆந்திராவில்.

ஸ்டில்லுக்காகவே படம் ஹிட்

ஸ்டில்லுக்காகவே படம் ஹிட்

இந்த ஒரு ஸ்டில்லுக்காகவே படம் சூப்பர் ஹிட் என்று இப்பவே பேச ஆரம்பித்து விட்டார்களாம் ரசிகர்கள். அதேசமயம் படத்திலும் ஸ்ருதி நிறைய கவர்ச்சி காட்டியுள்ளதாகவும் கமுக்கமாக பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X