இமான் இசையில், கௌதம் கார்த்தி படத்தில் பாடும் ஸ்ருதி
சென்னை: பன்முகத் திறமையாளரான ஸ்ருதிஹாசன் தற்போது நடிப்பில் பிஸி என்ற போதும், இசையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில், இமான் இசையில் கௌதம் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கான ஒரு பாடலை பாடிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.
இன்னும் பெயர் வைக்கப் படாத இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துரித கதியில் நடந்து வருகினறன. இசையமைப்பாளார் இமான் தான் படத்திற்கு இசை.

கை நிறையப் படங்கள்...
கும்கி படப் பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து, இமான் ரொம்பவே பிஸியோ பிசி. ரம்மி, பாண்டிய நாடு, ஜில்லா, சிகரம் தொடு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என கையில் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

இமான் விருப்பம்...
தற்போது, ‘கடல்' கௌதம் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கும் இமானே இசை. படத்திற்கான ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடினால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம் இமான்.

அழகிய ஸ்ருதி...
தனது விருப்பத்தை ஸ்ருதியிடம் சொல்ல, அவரும் மறுக்காமல் ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார். ரெக்கார்டிங் முடிந்த பிறகு ஸ்ருதியோடு தான் எடுத்துக் கொண்ட இரு படங்களை ட்வீட்டரில் போஸ்ட் செய்திருக்கிறார் இமான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...
அத்தோடு அவர் வெளியிட்டுள்ள கமெண்டில், ‘கௌதம் கார்த்தியின் படத்திற்கான பாடல் ஒன்றை ஸ்ருதி பாடிக் கொடுத்துள்ளார். எல்லாம் கடவுள் சித்தம்' எனத் தெரிவித்துள்ளார்.

பிஸி ஸ்ருதி...
ஸ்ருதி தற்போது தெலுங்கில் ராமைய்யா ஒஸ்தாவய்யா, ரெஸ் குர்ராம் ம்ற்றும் கப்பார் சிங்2 படங்களில் பிசி என்பது குறிப்பிடத்தகுந்தச் செய்தி.


Click it and Unblock the Notifications











