அப்பா கமலை விட்டுவிட்டு அம்மா, தங்கையுடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி
மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸன் தீபாவளி பண்டிகையை தனது தந்தை கமல் ஹாஸன் இல்லாமல் கொண்டாடியுள்ளார்.
கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் மும்பையில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இளைய மகள் அக்ஷரா மும்பையில் உள்ள தனது தாய் சரிகாவுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி தீபாவளி பண்டிகையை தந்தையுடன் கொண்டாடவில்லை.

கமல் இல்லாமல்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அம்மா மற்றும் தங்கையுடன் சிறப்பாக தீபாவளியை கொண்டாடினேன். இனிப்புகள், தீபங்கள் என்று மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

பிலிப்ஸ்
ஸ்ருதி அண்மையில் சென்னை வந்திருந்திருந்தார். பிலிப்ஸ் எல்இடி விளக்குகளுக்கு அவர் தான் பிராண்ட் அம்பாசிடர். அதன் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே சென்னை வந்தார்.

அக்ஷரா
அக்ஷராவுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவருக்கு கேமராவுக்கு பின்னால் இருக்கவே பிடித்திருக்கிறதாம்.

பாட்டும்
ஸ்ருதி நடிப்பு தவிர பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். தமிழ், கன்னடம் என்று பல மொழி படங்களில் பாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











