twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரோக்கியத்திற்காக மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்

    By Siva
    |

    Shruti Hassan
    கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிவித்துள்ளார்.

    கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானார். இந்தியாஸ் கிளாம் திவா என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் நடிக்க வரும் முன்பு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் அதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தானாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ருதி. மூச்சு விட சிரமமாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    எங்கே மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் பாடகியான தனது குரல் வளம் பாதிக்கப்படுமோ என்று பயந்துள்ளார். தற்போது சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், பிரச்சனையின்றி பாட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட்டில் லக் கைகொடுக்காவிட்டாலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஸ்ருதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. கவனம் செலுத்தினால் கோலிவுட்டின் நம்பர் 1 நாயகி என்ற இடத்தை அவர் எளிதில் பெற்றுவிடலாம்.

    ஏழாம் அறிவு படத்தை அடுத்து அவர் நடித்துள்ள 3 படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பலரும் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள். ஆனால் ஸ்ருதி ஆரோக்கியத்திற்காக செய்துள்ளார். ஆரோக்கியமான விஷயம்தான்...

    English summary
    Shruti Hassan has admitted that she went through septoplasty before her debut in Bollywood in 2009. She made it clear it clear that she went under knife for medical reasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X