அப்பாவை ஃபாலோ பண்ணும் மகள் ஸ்ருதிஹாசன்… அவரும் டிவிக்கு வந்துட்டார் பாருங்க

Recommended Video

அப்பா கமல் வழியில் டிவி ஷோவில் ஸ்ருதி.. ஏ ஆர் ரஹ்மானுடன் வைரல் வீடியோ

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தொலைக்காட்சி தொகுப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

சேனல்கள் டிஆர்பி ரேட்டிங் பெற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு திரையுலக நட்சத்திரங்களை தொகுப்பாளராக மாற்றி வருகின்றன.

Shruti Haasan becomes television host!

அப்படித் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது கமல் ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசனும் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார்.

சன் டிவியில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் ஸ்ருதி ஹாசன். அதற்கான ப்ரொமோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படுக்கையில் இருந்து எழும் ஸ்ருதி, "சமச்சோமா, வேலைக்குப் போனோமான்னு வாழுறது வாழ்க்கையே கிடையாது. ஃபேஸ்புக்ல ஐந்தாயிரம் ஃப்ரெண்ட்ஸ் வச்சிக்கிறது பெருமை இல்ல. லட்சம் பேர் எதிர்த்து வந்தாலும் நம்ம கூட நிக்குற ஒரு ஃப்ரெண்ட் போதும்"

என்று ஸ்ருதியே வாய்ஸ் ஓவர் கொடுத்துவிட்டு, காலிங் பெல் அடித்ததும், வந்தாச்சு..வந்தது யாருன்னு தெரியணுமா? ஹலோ சகோ நிகழ்ச்சியை பார்க்கத் தவறாதீர்கள் எனச் சொல்கிறார்.

இது நட்பு மற்றும் நண்பர்கள் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கும் எனத் தெரிகிறது. ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமல்ஹாசன், விஷால், பிரசன்னா மற்றும் வரலட்சுமிக்கு அடுத்ததாக இப்போது ஸ்ருதி ஹாசனும் களத்தில் இறங்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X