வெறித்தனமாக பாக்ஸிங் பயிற்சி… அசராமல் செய்து வரும் ஸ்ருதிஹாசன்!
சென்னை : துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமால் உடன் இணைந்து "யாரா" என்ற திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து திரையுலகினர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.
தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ஸ்ருதிஹாசன் ஹிந்தியிலும் தனது நடிப்பு வேட்டையை மிகத் தீவிரமாக்கி வருகிறார்.
பாடகி, நடிகை என பன்முகங்கள் கொண்ட ஸ்ருதிஹாசன் இப்பொழுது பாக்ஸிங்கை வெறித்தனமாக கற்றுக்கொண்டு வருகிறார். இதைப் பார்த்த பலரும் யார அடிச்சி துவைக்க இந்த பயிற்சின்னு தெரியலையே என யோசித்தவாறு அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

தெலுங்கில் முன்னணி
விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கி வரும் "லாபம்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள பவன் கல்யாண் மற்றும் ரவி தேஜா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தெறிக்கும் வசனங்கள்
லாபம் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதில் விஜய் சேதுபதி தோன்றும் பல காட்சிகளில் ஆழமான அரசியல் பற்றிய அனல் தெறிக்கும் வசனங்கள் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

ஸ்பீடான அப்டேட்
இந்த திரைப் படத்தின் டப்பிங் வேலைகள் முற்றிலும் முடிவுற்றது என விஜய்சேதுபதி செம ஸ்பீடான அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுத்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்து வருவதையொட்டி அவரது கதாபாத்திரத்தை பற்றிய தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

வலுவாக இருக்கும்
எனினும் எஸ்பி ஜனநாதன் திரைப்படம் என்றாலே அதில் கண்டிப்பாக சமூக அரசியல் இடம்பெறும் என்பதை கருத்தில் கொண்ட ரசிகர்கள் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும் என நம்பப்படுகிறது.

திரைப்படங்களில் கதைகளை
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தமிழ் தெலுங்கு ஹிந்தி என படு பிஸியாக நடித்து வரும் நிலையில், தான் நடிக்கும் திரைப்படங்களில் கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார்.

படத்திற்கான ஆயத்தம்
இந்நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவில் வெறித்தனமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்து வருகிறார். கவர்ச்சி கலந்த க்யூட்டான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த ஸ்ருதிஹாசனின் இந்த வெறித்தனமான பாக்ஸிங் பயிற்சி பலரையும் பாராட்ட வைத்திருக்கும் நிலையில், இந்த பயிற்சி இவரின் அடுத்த படத்திற்கான ஆயத்தம் என பலரும் கூறி வருகின்றனர்.
Recommended Video

யார அடிச்சு துவைக்க
இந்த வெறித்தனமான பாக்ஸிங் வீடியோவை பார்த்த பலரும் ஸ்ருதியை பாராட்டி வரும் நிலையில் ஒரு சிலர் யார அடிச்சு துவைக்க இந்த பயிற்சினு தெரியலயே! என நகைச்சுவையாகவும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











