Shruti Haasan: சொந்த உழைப்பில் புது வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்.. கமல்ஹாசனே வரலயானு கேட்கும் ரசிகர்கள்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் உள்ள கதாநாயகிகளில் மிகவும் தைரியமான கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தனது அப்பா கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவில் எல்லா மொழிகளிலும் பெரிய நட்பு வட்டம் உள்ளது, அதனால் சினிமாவில் தான் நினைக்கும் படத்தில் எளிதாக கமிட் ஆகி விட முடியும் என்ற சௌகரியம் இருந்தாலும், அதையெல்லாம் விடுத்து, முழுக்க முழுக்க தனது முடிவுகள் மற்றும் முயற்சியினால் சினிமா உலகில் தனக்கென தனி பாதையை உருவாக்கி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, எனக்கு என்று சொந்தமாக வீடு கூட இல்லை, நானே மும்பையுலும் ஹைதராபாத்திலும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும்போது, ஸ்ருதிஹாசன் சென்னையில் தனக்கென தனியா சொந்த வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இதன் கிரகபிரவேசம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கிரஹபிரவேஷத்தை மிகவும் ஆடம்பரமாக செய்யாமல், முழுக்க முழுக்க தனது நெருங்கிய தோழிகளை மட்டும் அழைத்து சிம்பிளாக முடித்துள்ளார்.

கமல்ஹாசன் எங்கே?: இந்த கிரக பிரவேசம் தொடர்பான புகைப்படங்களை ஸ்ருதிஹாசனின் தோழி ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, " சொந்த மண்ணுக்கே திரும்பி வந்துட்டாங்க. சென்னையில் புது வீடு வாங்கியதற்கு வாழ்த்துகள் ஸ்ருதிஹாசன்" என்று கேப்ஷனிட்டு வாழ்த்தி உள்ளார். இவரது இந்த வாழ்த்துக்கு ஸ்ருதிஹாசன் நன்றி தெரிவித்தது மட்டும் இல்லாமல், அந்த பதிவை ரீ போஸ்ட் செய்துள்ளார். மேலும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும் ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிலரோ அப்பா கமல்ஹாசனைக் காணவில்லையே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஸ்ருதி ஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் உருவாக்கியவர் நடிகை ஷ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், நடிகை மட்டுமல்லாமல் திறமையான பாடகி, இசையமைப்பாளர், பாப் ராக் பாடகி என பல முகங்களை கொண்டவர். சினிமாவிலும் இசையிலும் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.

டிரைன்: ஸ்ருதிஹாசன் மிகவுமே தைரியமான நடிகை என்பதால், பல சவாலான கதாபாத்திரங்களுக்கு அவரையே இயக்குநர்கள் பலரும் தேர்வு செய்கிறார்கள். இவர் நடித்துள்ள டிரைன் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. அந்த படத்தில் ஒரு பாடல் பாடுவதற்காக ஸ்ருதிஹாசனை அழைத்த இயக்குநர் மிஷ்கின், அதன் பின்னர் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, அதில் நடிக்க முடியுமா என்று கேட்டதற்கு உடனே சரி என்று கூறியுள்ளார் ஸ்ருதி. தமிழில் மீண்டும் ரீ - என்ட்ரி, சென்னையில் சொந்த வீடு என ஸ்ருதிஹாசன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications