எம்மதமும் சம்மதமே: அமெரிக்காவில் காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதி ஹாஸன்
லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை ஸ்ருதி ஹாஸன் தனது காதலருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஸ்ருதி அவ்வப்போது லண்டன் சென்று மைக்கேலை சந்திக்கிறார்.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் மைக்கேலும் இந்தியாவுக்கு வருகிறார்.

ஸ்ருதி
ஸ்ருதியின் காதலுக்கு அப்பா கமல் ஹாஸன் பச்சைக் கொடி காட்டி விட்டார் என்று கூறப்படுகிறது. மைக்கேல் சென்னை வந்து கமல் ஹாஸனுடன் தங்கியிருக்கிறார். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக ஆதவ் கண்ணதாசனின் திருமணத்தில் எல்லாம் கலந்து கொண்டார்கள்.

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையை காதலருடன் கொண்டாட லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் ஸ்ருதி. அங்கு மைக்கேலுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி.

பிடிக்கும்
மைக்கேல் தன்னை சிரிக்க வைப்பது தான் அவரிடம் மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு
ஸ்ருதி தனது காதலருடன் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது ரசிகர்களின் கருத்து. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.


Click it and Unblock the Notifications











