»   »  ஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை காதலிக்கிறார்?

ஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை காதலிக்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பை:நடிகை ஸ்ருதி ஹாஸன் காதலர் தினத்தை லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்கிற நாடக நடிகருடன் கொண்டாடியுள்ளாராம்.

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாஸன். மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.

ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது.

லண்டன்காரர்

லண்டன்காரர்

லண்டனில் பிறந்து வளர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரும், ஸ்ருதியும் காதலிக்கிறார்களாம். காதலர் தினத்தை ஸ்ருதியுடன் கொண்டாட மைக்கேல் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அவர் ஒரு வாரம் ஸ்ருதியுடன் தங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம்

ஸ்ருதி ஹாஸன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இரண்டு பேரின் கால்கள் மட்டும் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள ஆணின் கால்கள் மைக்கேலுடையது என்று கூறப்படுகிறது.

லண்டன்

லண்டன்

இங்கிலாந்தை சேர்ந்த ராக் பேண்டிற்காக ஒரு பாடல் பாட ஸ்ருதி லண்டனுக்கு சென்றாராம். அங்கு தான் மைக்கேல் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.

காதல்

காதல்

மைக்கேலும், ஸ்ருதி ஹாஸனும் மூன்று மாதங்களாக காதலித்து வருகிறார்களாம். மைக்கேல் இங்கிலாந்தை சேர்ந்த நாடகக் குழுவில் நடிகராக உள்ளாராம்.

English summary
Buzz is that Shruti Haasan is dating London based theatre actor Michael Corasale. Michael has come to Mumbai to celebrate Valentines day with Shruti.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil