நீருக்கடியில் ஸ்ருதி ஹாசன்.. இன்னாம்மா அழகா இருக்காரு தெரியுமா.. இதெல்லாம் எப்போ எடுத்தது தெரியுமா?
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தனது த்ரோபேக் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ருதி ஹாசன், சூர்யாவின் 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் காதல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடிப்புக்கு விடுப்பு விட்டு இருந்தார்.

கம்பேக்
காதல் தோல்வி அடைந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதை தீவிரப்படுத்தி உள்ளார். டோலிவுட்டில் கிராக் படத்திலும், தமிழில் விஜய்சேதுபதியுடன் லாபம் படத்திலும் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். மேலும், பல புதிய படங்களில் கமீட் ஆகி வருகிறார் இந்த கம்பேக் நாயகி.

அண்டர்வாட்டர் போட்டோஷூட்
நீருக்கடியில் நடத்தப்பட்ட அண்டர் வாட்டர் போட்டோஷூட் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். கலர் மற்றும் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் செம செக்ஸியான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறது.

இதழ்கள் மட்டும்
நெற்றி முதல் கண்கள் மூக்கு என எல்லாம் நீருக்கு மேலும், இதழ்களோடு சேர்த்து மொத்த அழகும் நீருக்கடியில் இருக்கும் இந்த க்ளிக்கை ரசிகர்கள் வாவ் போட்டு ரசித்து வருகின்றனர். அதிலும் எடுப்பாக தெரியும் ஸ்ருதி ஹாசனின் மார்பழகை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வாய் வராமல் திக்குமுக்காடி போயுள்ளனர்.

எங்கே வேண்டுமானாலும் ஆடுவேன்
நீருக்கடியில் அழகாக நீந்தியபடி எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், எங்கே வேண்டுமானாலும் தன்னால் நடனமாட முடியும் என அண்டர் வாட்டரில் ஆட்டம் போட்ட படி கொடுத்த போஸை போட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரசிகர்கள் அதற்கு ஏகப்பட்ட லைக்குகளை வாரி இரைத்து வருகின்றனர்.

எப்போது எடுத்தது
தளபதி விஜய்யின் புலி மற்றும் அஜித்துடன் வேதாளம் படங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு இந்த போட்டோஷூட்டை நடத்தி இருந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். த்ரோபேக் புகைப்படங்கள் என்றால், அதுக்குன்னு இவ்ளோ பழைய த்ரோபேக் புகைப்படங்களா என்றும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications