அப்பா படத்தில் குத்தாட்டமா.. நோ நோ.. ஸ்ருதி ஹாசன் மறுப்பு
சென்னை: தனது தந்தையின் விஸ்வரூபம் 2 படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடுமாறு வந்த வாய்ப்பை மகள் ஸ்ருதி ஹாசன் மறுத்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இனிமேல் நான் குத்துப்பாட்டுகளுக்கு ஆடவே மாட்டேன். இந்தப் படத்திற்கும் என்னால் ஆட முடியாது என்று அவர் கூறி விட்டாராம்.
ஆனால் அப்பா படத்தில் போய் எப்படி ஆடுவது என்ற எண்ணத்தில்தான் இப்பாடல் வாய்ப்பை ஸ்ருதி நிராகரித்துள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

2 பாகமாக...
விஸ்வரூபம் படம் எடுத்தபோதே அதைப் பெரிதாக எடுத்து இரண்டு துண்டாக வெட்டி இரு பாகமாக்கி விட்டார் கமல்ஹாசன்.

கடும் போராட்டம்...
முதல் படம் படு சூடாக இருந்ததால் பல சர்ச்சைகளையும், போராட்டங்களையும் கமல்ஹாசன் சந்திக்க வேண்டி வந்தது. ஆனாலும் மனிதர் கடைசி வரை இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்து, உணர்ச்சிகரமாக பேட்டி கொடுத்து சமாளித்து படத்தையும் தியேட்டர்களுக்குக் கொண்டு வந்தார்.

வேலைகள் பாக்கி...
ஆனால் விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகம்தான் எப்போது வரும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பாக்கி இருப்பதால்தான் இன்னும் திரையிட வழி பிறக்காமல் இருப்பதாக பேச்சு நிலவுகிறது.

ஐட்டம் பாடல்...
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு ஆட முடியுமா என்று ஸ்ருதியை அணுகினராம். ஆனால் அவரோ முடியாது என்று கூறி விட்டாராம்.

இந்தியில் மட்டும்...
இந்தியில் தேவர் என்ற படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் ஸ்ருதி. இதை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்திற்கு ஆடக் கூப்பிட்டார்களாம். ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு ஆட முடியாது என்று கூறி விட்டாராம் ஸ்ருதி.

நல்ல வேடங்கள்...
நல்ல நல்ல வேடங்களில் நடிக்கவே நான் ஆர்வமாக உள்ளேன். குத்துப்பாட்டுக்கு இனிமேல் ஆடப் போவதில்லை என்று கூறி விட்டாராம் ஸ்ருதி.

பேட்‘லக்’...
2009ல் இந்தியில் வெளியான லக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ருதி. அது அவருக்குக் கை கொடுக்கவில்லை. இதனால் தமிழில் நடித்தார். பின்னர் தெலுங்கில் நடித்தார். இப்போது மீண்டும் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

சரியான வாய்ப்பு...
அதேசமயம் தனது தந்தையுடன் நிச்சயம் இணைந்து பணியாற்றுவேன், அதற்கான சரியான வாய்ப்பு வரும்போது நிச்சயம் இணைந்து நடிப்பேன் என்று ஸ்ருதி கூறியுள்ளாராம்.

உன்னைப்போல் ஒருவன்...
இதற்கு முன்பு கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











