உள்ளாடையுடன் செம ஹாட்டாக ஆட்டம் போட்ட கமல் மகள்.. காதலர் போட்ட கமெண்ட்டை பாருங்க!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்த ஆண்டு ஸ்ருதிஹாசனுக்கு சூப்பர் ஆண்டு என்றே சொல்லலாம். ஜனவரி மாதம் வெளியான 2 பெரிய தெலுங்கு படங்களிலும் இவர் தான் ஹீரோயின்.

மேலும், இந்த ஆண்டு வெளியாக உள்ள பிரபாஸின் சலார் படத்தின் ஷூட்டிங்கையும் சமீபத்தில் முடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

கமல் மகள்

கமல் மகள்


உலகநாயகன் என ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களால் கொண்டாப்படும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

வயதான நடிகர்களுடன்

வயதான நடிகர்களுடன்

அப்பா கமலுக்கு போட்டி நடிகர்களாக தொடரும் சிரஞ்சீவி மற்றும் பாலய்யா உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடன் இந்த ஆண்டு ஸ்ருதிஹாசன் ஜோடி போட்டு நடித்திருந்தது ட்ரோல் செய்யப்பட்டது. வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுடனும் வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி உடனும் ஜோடி போட்டு நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

பிரபாஸுக்கு ஜோடி

பிரபாஸுக்கு ஜோடி

தமிழில் கடைசியாக விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் பெரிதாக கை கொடுக்காத நிலையில், தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். கேஜிஎஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின். சமீபத்தில், அந்த படத்தின் படப்பிடிப்பை தான் முடித்து விட்டதாக அறிவித்திருந்தார்.

உள்ளாடையுடன் கவர்ச்சி டான்ஸ்

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பைத் தாண்டி பாடல்கள் பாடுவதிலும், நடனம் ஆடுவதிலும் விளம்பரங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது உள்ளாடை அணிந்து கொண்டு செம ஹாட்டான டான்ஸ் ஒன்றை ஆடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

காதலர் கமெண்ட்

காதலர் கமெண்ட்

வெளிநாட்டு காதலரை ஸ்ருதிஹாசன் பிரேக்கப் செய்து பிரிந்த நிலையில், ஓவியக் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவை சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் இந்த கவர்ச்சி நடனத்தை பார்த்ததுமே 'ஹாட்டி' என ஸ்ருதிஹாசனின் காதலர் கமெண்ட் அடித்திருப்பது ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளது.

பாலய்யா படத்திலும்

பாலய்யா படத்திலும்

கடந்த சங்கராந்திக்கு வெளியான பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில், போதை மருந்தை நுகர்ந்து விட்டு படு கவர்ச்சியாக ஸ்ருதிஹாசன் போடும் டான்ஸ் வீடியோவும் சமூக வலைதளங்களில் ஓவர் ஜூம் செய்யப்பட்டு அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X