குடிபோதையில் ஸ்ருதி ஹாஸனின் ஹோட்டல் அறை கதவை நள்ளிரவில் தட்டிய ரசிகர்

By Siva

டேராடூன்: டேராடூனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாஸனின் அறைக் கதவை ரசிகர் ஒருவர் குடிபோதையில் தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது.

Shruti Haasan harassed by drunken fan, files case against him

இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ருதியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கே வந்து தாக்கினார். இதையடுத்து ஸ்ருதி மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X