இதுதான் குவரைன்டைன் நவரசமா? அழகழகான எக்ஸ்பிரசன்களில் ஸ்ருதிஹாசன்.. ரசித்துக் கொண்டாடும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் விதவிதமான எக்ஸ்பிரசன்களில் வெளியிட்டுள்ள போட்டோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

Shruti Hasan weird Quarantine | Lock Down Diaries

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது.

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று 16 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவால் நேற்று மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஷூட்டிங் ரத்து

ஷூட்டிங் ரத்து

மொத்தம் 519 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா, டிவி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

தாங்கள் எப்படி நேரத்தைச் செலவழிக்கிறோம் என்று தங்கள் சமூக வலைத்தளங்களில் போட்டோ, வீடியோ வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், அடிக்கடி போட்டோ, வீடியோ வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மெர்சல் வாய்ஸ்

மெர்சல் வாய்ஸ்

இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை போட்டோ வைரலாகி வருகிறது. அதில் நவரசங்களை காட்டியபடி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். 'எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்று விசாரித்துள்ள ஸ்ருதியின் அந்த புகைப்படத்துக்கு ஏராளமான நெட்டிசன்ஸ் கமென்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஒருவர், ஓ இதுதான் குவாரன்டைன் நவரசமா? என்று கேட்டுள்ளார். இன்னும் சிலர், உங்க யூடியூப் வீடியோ கலக்குது.. உங்க வாய்ஸ் மெர்சலா இருக்கு என்று கூறியுள்ளனர்.

View this post on Instagram

How’s everyone doing ? 🖤

A post shared by @ shrutzhaasan on

கருப்பு கலர்

இந்த போட்டோ இருக்கே, இது ஆஸ்கருக்கு சமமானது என்று ஒருவரும் இந்த எக்ஸ்பிரஷன்ஸ் அழகு, உங்க திறமைக்கு நீங்க எங்கயோ இருக்கணும் என்று சிலரும் கூறியுள்ளனர். இன்னொரு ரசிகை, ஏன் எப்பவும் கருப்பு கலருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறீங்க? என்று கேட்டுள்ளார். அப்படியே பிகினி போட்டோவும் போடுங்களேன் என்று ஒரு ரசிகர் கோரிக்கை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X