வாள்வீச்சில் பயிற்சி பெறும் 'இளவரசி' ஸ்ருதி ஹாசன்!
சுந்தர் சி இயக்கும் பிரமாண்ட படமான சங்கமித்ரா குறித்து நிறைய எதிர்மறை செய்திகள் வந்துவிட்டன. ஆனால் படம் கைவிடப்படவில்லை... நிச்சயம் படப்பிடிப்பு தொடங்கப் போகிறது என்று இப்போது கூறப்படுகிறது.
கூடுதல் செய்தி... இந்தப் படத்தில் இளவரசி வேடத்தில் நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாஸன் குறித்து.

சங்கமித்ரா படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதி. போரில் வல்லமை படைத்த இளவரசி வேடம் என்பதால், சும்மா ஒப்புக்கு நடிக்காமல், முறையான பயிற்சி பெறுகிறாராம் ஸ்ருதிஹாசன். அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார்.
இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது, "வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு வருகிறார். அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்," என்றனர்.

பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்ட பயிற்சிகளையும் கற்கப் போகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதி ஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.


Click it and Unblock the Notifications











