தனுஷ் கூட சேர்ந்ததால் வந்த பிரச்சனை.. 2 வருஷம் என்னை யாருமே கூப்பிடல.. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான '3' படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் 2 ஆண்டுகள் தன்னை யாருமே புதிய படங்களில் கமிட் செய்யவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் உடன் ஆல்பம் சாங்கில் நடித்த கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

shruti haasan dhanush coolie

கூலி பட வாய்ப்புக்காக லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்த ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் திடீர் திடீரென தனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றும் பேசியுள்ளார். பிரபாஸின் சலார் படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் ஸ்ருதிஹாசனுக்கு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கமல் மகள்கள்: நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இருவருமே சினிமாவில் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசனுக்காவது பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், அக்‌ஷரா ஹாசனுக்கு அதுகூட கிடைப்பதில்லை. அஜித், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் கூட முக்கியமான ரோலில் மட்டுமே அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.

காதல் தோல்வி: நடிகை ஸ்ருதிஹாசன் முதலில் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை டேட் செய்து வந்தார். அவரை திருமணம் செய்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடன் பிரேக்கப் ஆனது. அதன் பின்னர் மும்பையை சேர்ந்த டூடுல் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவை காதலித்தார். கடந்த சில மாதங்களூக்கு முன்னதாக அவருடனும் பிரேக்கப் ஏற்பட்ட நிலையில், தற்போது திருமணமே தேவையில்லை என்றும் யாராக இருந்தாலும் நட்புடனே நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்கிற முடிவுக்கே ஸ்ருதிஹாசன் வந்துவிட்டாராம்.

shruti haasan dhanush coolie

தனுஷ் உடன் நடித்த பிறகு: 2012ம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் நடித்த '3' படம் வெளியானது. அனிருத் இசையில் வெளியான அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வேறலெவலில் ஹிட் அடித்தாலும் படம் ரசிகர்களுக்கு சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. அந்த படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனை புதிய படங்களில் நடிக்க யாருமே அழைக்கவில்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஷாலின் பூஜை படத்தில் தான் 2014ம் ஆண்டு மீண்டும் கோலிவுட்டில் அவரது படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X