படவாய்ப்பு இல்லாததால்… 60 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன் !

சென்னை : தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் வயதில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியையும் வசூலையும் பெற்றுத் தரவில்லை.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

பாடகி , நடனம், நடிப்பு என அனைத்திலும் கை தேர்ந்தவராக ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக் கூடிய மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக தென்னிந்தியாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். தமிழ் சினிமாவிற்கு ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம்-3 என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் பிரபலமானார்

தெலுங்கில் பிரபலமானார்

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டது. அதில் மனதை கொள்ளை கொள்ளும் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். தமிழில் இவர் நடித்த லாபம் திரைப்படம் தோல்வியைத் தழுவியதால் தமிழில் தற்போதைக்கு இவருக்கு படங்கள் இல்லை. அதேபோல சாலர் திரைப்படத்தை தவிர தெலுங்கிலும் கைவசம் படங்கள் இல்லை.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகி உள்ளார். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு பூஜையுடன்

படப்பிடிப்பு பூஜையுடன்

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தற்போது தொடங்கியுள்ளது. பூஜையில் படத்தின் நாயகன் பாலகிருஷ்ணாவும் ஸ்ருதிஹாசனும் கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு இணையத்த்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி ஏற்றுக்கொள்ளவில்லை

ஸ்ருதி ஏற்றுக்கொள்ளவில்லை

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த வேதாளம் படத்தை போலா சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க அவரது தங்கையாக லட்சுமி மேனன் தமிழில் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தெலுங்கும் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. தெலுங்கிலும், இதே கதாபாத்திரல் நடிக்க ஸ்ருதி ஒத்துக்கொள்ளாததால். ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா தற்போதுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X