செல்லப்பிராணிகளை கொஞ்சும்.. செல்லக்குட்டி ஸ்ருதிஹாசன்!‘

சென்னை : பிரபல நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர் ,பாடலாசிரியர், எழுத்தாளர் ,பாடகர் என்று சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை திறமை உடைய நடிகர் கமலஹாசனின் மகள் தான் ஸ்ருதிஹாசன்.

நடிகரும் இயக்குனருமான கமலஹாசன் கலைத்துறையில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் அவரது மூத்த பெண்ணான ஸ்ருதிஹாசன் தமிழ் ,தெலுங்கு, மற்றும் ஹிந்தி சினிமா துறைகளில் கலக்கி வருகிறார். கமல் இயக்கி நடித்த ஹேராம் என்ற திரைப்படத்தில் குட்டி பெண்ணாக நடித்தார் ஸ்ருதிஹாசன் அதுவே ஸ்ருதிஹாசனின் முதல் திரைப்படம்

கோலிவுட்டில் பல நடிகைகள் பட வாய்ப்பை அதிகம் வைத்திருந்தாலும் ஸ்ருதிஹாசன் வாரிசு நடிகர் என்ற பெயரில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார் நடிப்பில் மட்டுமே தன் கவனத்தை செலுத்தாமல் அனைத்துத் துறைகளிலும் பட்டையைக் கிளப்புவார் ஸ்ருதிஹாசன் தாய் எட்டடி பாய்ந்தால் கன்று பதினாறு அடி பாயும் என்பார்கள்

கால் தடம்

கால் தடம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன் கவர்ச்சியிலும் வெளுத்து வாங்குகிறார். தமிழில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப் படத்தில் ஹீரோயினியாக நடித்த ஸ்ருதிஹாசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் தெலுங்கு துறையிலும் பல முக்கிய கதாநாயகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை வழங்கினார்

ஆடலும் பாடலும்

ஆடலும் பாடலும்

என்னதான் வாரிசு நடிகை என்றாலும் ஸ்ருதிஹாசன் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க பல முயற்சிகளை கையாண்டார் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடிப்பது கவர்ச்சியை கொஞ்சம் அள்ளித் தெளிப்பது பாட்டு பாடுவதில் வல்லமை கொண்ட ஸ்ருதிஹாசன் தமிழ் தெலுங்கு ஹிந்தி என எல்லாவித சினிமா ரசிகர்களுக்கு விருந்து ஊட்டும் வகையில் நடிப்பு ஆடலும் பாடலும் கவர்ச்சியும் வழங்கி வருகிறார்.

சினிமாவில் கலக்கும்

சினிமாவில் கலக்கும்

மார்க்கெட்டை பிடிக்க பல நடிகைகள் போராடிக் கொண்டிருக்கும் கொண்டிருக்கும் நிலையில் என்னதான் வாரிசு நடிகர் என்றாலும் பல திறமைகள் உடைய ஸ்ருதி ஹாசனுக்கு பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார் விஜய்யுடன் புலி ,அஜித்தோடு வேதாளம் ,சூர்யாவுடன் ஏழாம் அறிவு தனுஷுடன் 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் தெலுங்கு சினிமாவிலும் ராம்சரண் ஜூனியர் என் டி ஆர் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார் சுருதிஹாசன் அதுமட்டுமின்றி ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார்

சுதந்திரம் கொடுத்த தந்தை

சுதந்திரம் கொடுத்த தந்தை

சினிமா துறையில் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள பல நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்கள் அதில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் என்னதான் தந்தை சினிமா துறையில் ஜாம்பவானாக இருந்தாலும் மகளை கொஞ்சம் சுதந்திரமாகவே வளர்த்துள்ளார். நடிகர் கமலஹாசனிடம் ஒரு பத்திரிக்கையாளர், ஸ்ருதிஹாசன் அதிக கவர்ச்சியாக நடிப்பதை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கமலஹாசன் நான் எனது மகளுக்கு சுயமரியாதையையும் பல நல்ல ஒழுக்கங்களையும் வாழ்வில் உள்ள நெளிவு சுளிவுகளையும் கற்பித்து உள்ளேன் என்று பதிலளித்தார்

Recommended Video

வெறித்தனமாக கிக் பாக்ஸிங் பயிற்சி செய்யும் ஸ்ருதிஹாசன் - வைரலாகும் வீடியோ
ஸ்ருதி

ஸ்ருதி

சினிமா துறையில் எப்படி இருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில் விலங்குகள் மீது அதிக நாட்டம் உடைய ஸ்ருதிஹாசன் நாய்க்குட்டியை கொஞ்சும் க்யூட்டான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஸ்ருதிஹாசன் வெளியிட்ட அந்த போட்டோவில் எவ்வித கவர்ச்சி இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர் காரணம் ஸ்ருதிஹாசனின் இளகிய மனமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X