மாளவிகா மோகனனை தொடர்ந்து கம்பு சுத்தும் ஸ்ருதிஹாசன்.. ’கூலி’ படத்தில் ஆக்‌ஷன் பிளாக் இருக்கா?

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. அடுத்த வாரம் அந்த திரைப்படம் இந்தியிலும் வெளியாகிறது. தங்கலான் படத்தில் ஆரத்தி எனும் கதாபாத்திரத்தில் தங்கத்தை காக்கும் தேவதையாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

சியான் விக்ரம் உடன் சண்டை போடும் காட்சிகளுக்காக சிலம்பாட்ட பயிற்சியை அவர் மேற்கொண்டு இருந்த காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டன.

shruti haasan coolie rajinikanth

மாளவிகா மோகனனை தொடர்ந்து தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் சிலம்பாட்ட பயிற்சியை கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பயிற்சி செய்து வரும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

கமல்ஹாசனின் மகள்: உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் ப்ரீத்தி என்னும் கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஆரம்ப கால கட்டத்தில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், முதன்முறையாக கமல்ஹாசனின் மகள் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கம்பு சுத்தும் ஸ்ருதிஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு உடம்பில் சில பிரச்சனைகள் உள்ளதாக வெளிப்படையாக சமீபத்தில் பகிர்ந்திருந்தார். சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வரும் அவர் தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தற்காப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் ஸ்ருதிஹாசன் தனது பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கூலி படத்தில் ஆக்‌ஷன் பிளாக்கா?: ஸ்ருதிஹாசன் கம்பு சுத்தும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூலி படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஆக்ஷன் பிளாக் இருக்கிறதா? என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், இது அவருக்கான தனிப்பட்ட தற்காப்பு பயிற்சி என்றே இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசனுக்கு கண்டிப்பாக ஸ்பெஷலான காட்சிகளை படத்தில் வைப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சலார் 2: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன் பிரபாஸ் உடன் இணைந்து சலார் 2 படத்திலும் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவதையே தனது வேலையாக பார்க்கும் பிரபாஸ் இரண்டாவது பாதியிலாவது ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்வாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X