சூப்பர் ஸ்டார் உடன் நடித்த அனுபவம்.. கூலி அன்லீஷ்ட் நிகழ்ச்சியில் சிலாகித்த ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதி ஹாசன் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், அமீர் கான், அனிருத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ரஜினியின் ஸ்டைல், எளிமை, அர்ப்பணிப்பு தன்னை கவர்ந்ததாகக் கூறினார். லோகேஷ், அமீர், அனிருத் ஆகியோரின் திறமையையும், அவர்களுடன் இணைந்து பணியாற்றியதையும் சிலாகித்துப் பேசினார்.

ரஜினி சாருடன் நடித்த அனுபவத்தைப் பற்றி ஸ்ருதி ஹாசன் சிலாகித்துப் பேசியது அனைவரையும் கவர்ந்தது. "அவருடைய ஸ்டைல், வசீகரம், எளிமை எல்லாமே பெர்ஃபெக்ட்" என்று அவர் கூறியது அரங்கத்தில் கைத்தட்டலை வரவழைத்தது. அந்த நிகழ்வில் ஸ்ருதி இன்னும் என்ன பேசினார் என்பதைப் பார்ப்போம்.

ஸ்ருதி ஹாசன் முதலில் தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். "இவ்வளவு பெரிய டீமில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை," என்று கூறினார். ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், "நீங்க அபாரமானவர். உங்களுடைய அர்ப்பணிப்பு என்னை ரொம்ப inspire பண்ணுச்சு," என்றார்.

Photo Credit:

லோகேஷ் கனகராஜ் பற்றி ஸ்ருதி பேசுகையில், "விக்ரம் படம் பார்த்துட்டு உங்களுடைய ரசிகையாகிட்டேன். உங்களுடைய சினிமாவுல நானும் ஒரு பகுதியாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன். வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி" என்றார். மேலும், லோகேஷ் எப்படி அமைதியாகவும், அனைவருடனும் இணைந்து வேலை செய்கிறார் என்றும் பாராட்டினார்.

அமீர் கான் அவர்களைப் பற்றி ஸ்ருதி, "லகான் படம் பார்க்க தியேட்டருக்குப் போனப்போ, அது கிரிக்கெட் ஸ்டேடியம் மாதிரி ஆயிடுச்சு. தில் சாஹ்தா ஹை படத்துல உங்களுடைய perfectionism பார்த்து அசந்து போனேன்" என்று கூறினார். மேலும், அமீர் கான் சினிமாவுக்காக செய்த பங்களிப்பைப் புகழ்ந்து பேசினார்.

அனிருத் பற்றி ஸ்ருதி பேசுகையில், "இன்னைக்கு கீபோர்ட் வாசிச்சவன், பெரிய மியூசிக் டைரக்டரா வளர்ந்து இருக்கான். உன்ன நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு," என்றார். அனிருத் இசையமைக்கும் படங்களில் தானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதாகக் கூறினார்.

ரஜினி சாருடன் வேலை செய்தது பற்றி ஸ்ருதி, "அவருடைய ஆளுமை, எளிமை எல்லாமே என்னை ரொம்ப கவர்ந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவருடைய kindness என்னை நெகிழ வச்சிடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் என்கரேஜ் பண்ணது மறக்க முடியாதது," என்று கூறினார். மேலும், ரஜினி சாருக்காக ஒரு பாட்டுப் பாடணும்னு ஆசைப்பட்டதாகவும் சொன்னார்.

ஒரு பெண் இயக்குநரின் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து ஸ்ருதி, "அந்த கேரக்டரோட நிறைய பெண்கள் relate பண்ணிக்க முடியும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்," என்று ஸ்ருதி ஹாசன் கூறினார்.

More from Filmibeat

Read more about: shruti haasan kollywood coolie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X