ரசிகர் கேட்ட தாறுமாறான கேள்வி...நறுக் பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்

மும்பை : நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக கமிட்டாகி நடித்து வருகிறார். பிரபாசுடன் தற்போது சலார் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்தடுத்து பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.

சர்ச்சைக்கு பெயர்போன ஸ்ருதி

சர்ச்சைக்கு பெயர்போன ஸ்ருதி

உலகநாயகன் கமலின் மகளாக இருந்தபோதிலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக உள்ளவர் ஸ்ருதிஹாசன். பல விஷயங்களில் இவர் வெளிப்படையாக காணப்படுகிறார். தான் குடிக்கு அடிமையாக இருந்ததாக இவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ஏழாம் அறிவு படத்தில் அறிமுகம்

ஏழாம் அறிவு படத்தில் அறிமுகம்

தமிழில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது. அஜித், சூர்யா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். ஆனாலும் தமிழில் இவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை.

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம்

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம்

இதையடுத்து பாலகிருஷ்ணா ஜோடியாக இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்திலும் சிரஞ்சீவி ஜோடியாக அவரது 154வது படத்தில் பாபி இயக்கத்தில் ஒரு படத்திலும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ருதி வயது மூத்த நடிகர்களுடன் அடுத்தடுத்த ஒப்பந்தமாவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி -பதில் செஷன்

கேள்வி -பதில் செஷன்

இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஸ்ருதி மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தனது காதலருடனான பல புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது லைவ் சாட்டில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் இவர் லைவ் சாட்டில் உரையாடிய போது ரசிகர் ஒருவரின் கேள்வி சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகரின் தாறுமாறு கேள்வி

ரசிகரின் தாறுமாறு கேள்வி

ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத ஸ்ருதி சிறப்பான பதிலை அவருக்கு கொடுத்துள்ளார். அந்த ரசிகர் ஸ்ருதியின் லிப் சைஸை கேட்க, அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், லிப் சைஸ் என்று ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உடனடியாக ஒரு செல்பி எடுத்து அதை பதிவிட்டுள்ளார்.

லிப் சைஸ் கேட்ட ரசிகருக்கு பதில்

லிப் சைஸ் கேட்ட ரசிகருக்கு பதில்

அந்த செல்பியை வைத்து தனது லிப் சைஸை அளந்து கொள்ளுமாறு மிகவும் மென்மையாக பதிலடி கொடுத்துள்ளார். ரசிகர்களுடனான தங்களது உறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடிகைகள் இத்தகைய லைவ் சாட்டை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சிலர் அநாகரிகமாக நடந்து கொள்வது அனைவரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X