எப்படி சிக்குன்னு இருக்கேன் பாருங்க.. ஃபிட்னஸ் சீக்ரெட்டை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்

சென்னை : கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வழக்கமான வீடியோக்கள், ஃபோட்டோக்களை பதிவிட துவங்கி விட்டனர்.

Recommended Video

Shrithi Auntyகு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல | Shruthi Replies Fans Question

அந்த வரிசையில் ஸ்ருதி ஹாசனும் இணைந்துள்ளார். மீண்டும் தான் ஜிம்மிற்கு திரும்பி உள்ளதை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஃபோட்டோவுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

டபுள் ஒர்க்அவுட்

டபுள் ஒர்க்அவுட்

அதில், லாக்டவுன் காலத்தில் கொஞ்சம் அதிகமான நேரம் ரிலாக்சாக இருந்து விட்டதால், தான் இன்று டபுள் ஒர்க்அவுட் செய்ததாக குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி. வழக்கமாக தான் எப்படி பல்வேறு விதமான ஒர்க்அவுட் பயிற்சிகளை செய்கிறார் என்பதையும் கூறி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவில் சீக்ரெட்

இன்ஸ்டாகிராம் பதிவில் சீக்ரெட்

ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் கடுமையான பயிற்சிக்கு திரும்பி உள்ளேன். இப்படி செய்வது பிடித்திருக்கிறது. இந்த கடுமையான முறையில் தான் நான் எனது உடலையும், மனதையும் வலிமையாக வைத்துள்ளேன்.

வருத்திக் கொள்ளாதீர்கள்

வருத்திக் கொள்ளாதீர்கள்

பலரையும் போல் இந்த லாக்டவுனில் தினமும் ஒர்க்அவுட் செய்ததால் டபுள் ஓர்க்அவுட் செய்வது கொஞ்சம் எளிதாக உள்ளது. அதற்காக மனரீதியாக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். அடுத்து உங்களை எப்படி முன்னெடுத்து செல்ல முடியும் என்ற புதிய மனப்பான்மையை உருவாக்குங்கள்.

ஸ்ருதியின் ஃபிட்னஸ் சீக்ரெட் இது தான்

ஸ்ருதியின் ஃபிட்னஸ் சீக்ரெட் இது தான்

உங்களுக்கு எந்த மாதிரி ஒர்க்அவுட் பிடிக்கும். மனதிற்கு இதமான நல்ல பாடல்களுடன் சண்டை பயிற்சி எடுத்துக் கொள்வேன். மிகவும் சீக்ரெட் என்னவென்றால், நான் 90 களின் இசைக்கு ஒரு மணி நேரமாவது நடனமாடுவேன். இவ்வாறு ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதியின் இந்த பதிவை 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

பிஸியாக இருக்கும் ஸ்ருதி

பிஸியாக இருக்கும் ஸ்ருதி

தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஸ்ருதி நடித்த வக்கீல் சாப் படம் சமீபத்தில் தான் ரிலீசாகி, நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்த லாபம் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. தற்போது பிரபாசுடன் ஆக்ஷன் த்ரில்லர் படமான சலார் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X