நான் மட்டும் பையனாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன்: ஸ்ருதி ஹாஸன்
ஹைதராபாத்: நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாஸன் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த ரேஸ் குர்ரம் தெலுங்கு படம் கடந்த 11ம் தேதி ரிலீஸானது. படம் ஆந்திரா, பிற மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது.
படம் நன்றாக ஓடுவதால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார்.

லுங்கி டான்ஸ்
ரேஸ் குர்ரம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் லுங்கி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த டான்ஸுக்கு ஆந்திராவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்ருதி
நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருந்திருப்பேன். ஆனால் பெண்ணாக பிறந்ததால் லுங்கி கட்ட முடியவில்லை. எனக்கு லுங்கி தான் மிகவும் பிடித்த உடை. லுங்கி கட்ட வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றார் ஸ்ருதி.

போஸ்டர்
ரேஸ் குர்ரம் போஸ்டர்கள் படு கவர்ச்சியாக உள்ளதாகக் கூறி ஆந்திராவில் பல இடங்களில் அவற்றை கிழித்து எறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர் கவர்ச்சி
ரேஸ் குர்ரம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஓவர் கவர்ச்சியாக நடித்துள்ளார், குத்தாட்ட நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவார் கவர்ச்சியில் என்று விமர்சனம் எழுந்தது.

ஷாருக்கான்
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் தான் இந்த லுங்கி டான்ஸை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து ஆளாளுக்கு லுங்கி டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











