பக்தி முத்திடுச்சோ.. டி-சர்ட்டில் முருக வேல்.. கடவுள் போல போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

சென்னை: கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது, முருகர் வேல் பிரின்ட் செய்த டி-சர்ட்டை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Recommended Video

Shocking Shruti Hassan! கமல் ஹாசன் மகள் இல்லையா? | புதிய குழப்பம் | Kamal Hassan, Sariga

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

டாப் ஹீரோக்கள்

டாப் ஹீரோக்கள்

அறிமுக படமே சூர்யாவுடன் தான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ம் அறிவு படத்தில் அசத்தலாக நடித்திருப்பார். அந்த படத்தைத் தொடர்ந்து கோலிவுட்டில் தளபதி விஜய்யுடன் புலி, தல அஜித்துடன் வேதாளம், மீண்டும் சூர்யாவுடன் சிங்கம் 3, விஷாலுடன் பூஜை, தனுஷுடன் 3 என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

சிறந்த பாடகி

சிறந்த பாடகி

நடிகையாக மட்டும் சினிமாவில் கலக்காமல் தனது குரலாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் ஒரு பாடலை பாடி இருந்த நிலையில், தான் நடித்த பல படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து கொடுத்து வந்தார்.

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்

இந்த லாக்டவுன் நேரத்தில், இசை கருவிகளை இசைக்கவும் கற்று வருகிறார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில், தனது பியானோவுடன் சில இசை கலையை முயற்சித்து வருவதாக பதிவிட்டு இருந்தது அவரது இன்ஸ்டா ரசிகர்களையும் பல பிரபலங்களையும் வெகுவாக ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கமல் இயக்கத்தில் வெளியான அறிவும் அன்பும் பாடலிலும் ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்திருந்தார்.

முருக வேல்

முருக வேல்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் கடவுளான முருகனின் ஆயுதமான வேல், ஸ்ருதி ஹாசனின் டி-சர்ட்டில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடவுளை போல தனது கைகளை வைத்துக் கொண்டு ஸ்ருதி ஹாசன் போஸ் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

டி-சர்ட் சூப்பர்

டி-சர்ட் சூப்பர்

ஸ்ருதி ஹாசனின் இந்த வேல் டி-சர்ட்டை பார்த்த பல ரசிகர்களும் பக்தி பரவசத்தில் மூழ்கி போய் வேல் வேல் முருகா என்றும் அரோகரா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். டோலிவுட் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு ‘ஐ லவ் தட் டி-சர்ட்' என கமெண்ட் செய்ய லட்சக்கணக்கான ரசிகர்களும் ஸ்ருதி ஹாசனுக்கு லைக் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X