மது என்னை ஆட்டிப்படைத்தது.. 8 ஆண்டுகள் மதுவிற்கு அடிமையாக இருந்தேன்..ஸ்ருதி ஹாசன் பேட்டி!

சென்னை: 8 ஆண்டுகள் மதுவிற்கு அடிமையாக இருந்தேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டார் ஸ்ருதி.

பாடுவதில் பெரிய ஆர்வம் கொண்ட ஸ்ருதி பாடகியாக வலம் வருவார் என்று பார்த்தால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Shruti Haasan said in an interview that she was addicted to alcohol for 8 years

நடிகை ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில், பள்ளி மாணவியாக கனகச்சிதமாக நடித்திருந்தார். அந்த படமும் வெற்றிவாகை சூடியது. அதன் பிறகு, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

தெலுங்கில் பிஸி: சில காலகட்டத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்பு குறைந்ததை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்று அங்கு கணிசமான படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக அவர் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி போன்ற படத்தில் நடித்தார். ஹாய் நன்னாவில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஸ்ருதி, "மான்ஸ்டர் மெஷின்" என்ற ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார்.

சலார்: தற்போது,ஸ்ருதி ஹாசன், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திய என ஐந்து மொழிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

மது என்னை ஆட்டிப்படைத்தது: இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாட்களில் பார்ட்டிக்கு சென்றால், நான் நிதானமாக இருக்கமாட்டேன். நண்பர்களுடன் குடிப்பதை பெருதும் விரும்பினேன். ஆனால், நான், ஒரு போதும் போதைப்பொருளை பயன்படுத்தியது இல்லை.

மீண்டுள்ளேன்: அந்த 8 ஆண்டுகள் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்தது, தற்போது அதிலிருந்து மீண்டு இருக்கிறேன். இப்போது அதைப்பற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் தான் என்று நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X