வாராஹி அம்மனால் வாழ்க்கையே மாறியது.. பக்தி பழமான ஸ்ருதிஹாசன்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தற்போது தன்னுடைய ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் தனக்கான தனி இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான கூலி திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளாக நடித்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்: இந்நிலையில், அண்மையில் ஆங்கில யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையை மாற்றிய ஆன்மிக அனுபவம் குறித்து அவர் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார். அதில், "என் வாழ்க்கையில் சமீபத்தில் நான் வாராஹி அம்மன் கோவிலுக்கு வந்தேன். நாம் மட்டுமில்ல கடவுளும் நம்பல தேர்ந்தெடுக்கிறார் என்பதை அன்று தான் நான் நம்பினேன். நான் அன்று நான் சற்று சோகமாக இருந்ததால், என் நண்பன்,வெளியில போனா நல்லா இருக்கும் என என்னை வாராஹி கோயிலுக்கு என்னை அழைத்து சென்றார்.

Shruti Haasan temple
Photo Credit:

வாழ்க்கையே மாறியது: அது ரொம்ப சின்ன கோவில்தான். அந்த கோயில்ல டொனேஷன் இல்ல, வி.ஐ.பி வரிசை இல்லை, நார்மலான ஒரு கோயில். ஆனா அந்த கோயிலுக்கு உள்ள எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. அன்று தான் நாம மட்டுமில்லை கடவுளும் நம்மை தேர்ந்தெடுக்கிறார் என்பதை நான் புரிஞ்சுகிட்டேன். அதன் பிறகு என்னோட மனசுக்குள்ள இருந்த பயம் எல்லாமே போயிடுச்சு. ஏதோ ஒரு பெரிய தெளிவு கிடைச்ச மாதிரி நான் அன்று உணர்ந்தேன் என அவர் கூறியுள்ளார். ஸ்ருதிஹாசனின் பகிர்ந்துள்ள இந்த ஆன்மிக அனுபவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

காதல் தோல்வி: சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ருதிஹாசன் டூடில் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாமல், இருவரும் பிரிந்துவிட்டனர். ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து சாந்தனுவுடன் எடுத்திருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டது பிரிவை உறுதிப்படுத்தினார். தற்போது ஸ்ருதி ஹாசன் சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X