வீங்கிய உதடு..ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஸ்ருதிஹாசன்.. என்ன ஆச்சு?பதறிய ரசிகர்கள்!

சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோவை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் நலம் விசாரித்து வருகிறார்கள்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், அப்பாவுடன் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து, 2009ம் ஆண்டு லக் எனும் இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி, தமிழில் 2011ம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ஆம் அறிவு படத்தில் நடித்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

முதல் படத்திலேயே புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்து விட்டார் ஸ்ருதி. முதல் படமே சூப்பர் டூபர் ஹிட்டடித்து முன்னணி நடிகை லிஸ்டில் இணைந்த ஸ்ருதி,தமிழ்,தெலுங்கு, இந்தி என வரிசையாக பல மொழிப்படங்களில் நடித்து வந்தார். முன்னதாக மைக்கேல் கார்சலேவை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

மும்பையில் செட்டிலானார்

மும்பையில் செட்டிலானார்

இதனால், மன அழுத்தத்தில் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருகிறார். காதலருக்காக மும்பையிலேயே செட்டினான ஸ்ருதி அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் படு நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு டிரெண்டாகி வருகின்றனர்.

பிறந்த நாளுக்குகூடவரவில்லை

பிறந்த நாளுக்குகூடவரவில்லை

மும்பைக்கு போன ஸ்ருதிஹாசன் எந்த காரணத்திற்காவும் சென்னை பக்கம் வருவதே இல்லை. அண்மையில் கமலின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்த போது கூட அதில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை, வேறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை மட்டும் போட்டிருந்தார்.

தமிழில் படங்கள் இல்லை

தமிழில் படங்கள் இல்லை

தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார் திரைப்படத்திலும், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலக்கிருஷ்ணாவுடன் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்பு இல்லாததால், 60 வயதான பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்த்து நடித்து வருகிறார். அதுவும் தமிழில் இவருக்கு ஒருபடம் கூட இல்லை

பதறிப்போன ரசிகர்கள்

பதறிப்போன ரசிகர்கள்

இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன்ன தனது இன்ஸ்டா பக்கத்தில் முகம் மற்றும் உதடு வீங்கிய நிலையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனான சரியான செல்ஃபிகள், மோசமான முடி, காய்ச்சல் மற்றும் சைனஷால் வீங்கிய முகம், மாதவிடாய் நாள் இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறிப்போன நிலையில், கேப்ஷனைப் பார்த்து கூலானார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X