காதலரை கடுப்பேற்றிய ஸ்ருதிஹாசன்... இப்படி பண்ணா எப்படி?

மும்பை : நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் இறுதியாக பெஸ்ட் செல்லர் என்ற இணைய தொடர் அமேசானில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது பிரபாஸுடன் சலார் படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். மேலும் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான பூஜை, ஏழாம் அறிவு, 3, புலி, உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுத் தந்தன. மேலும் இசையமைப்பாளர் மற்றும் பாடகியாகவும் இவர் சிறப்பாக வலம்வருகிறார்.

பிரபாசுடன் சலார் படம்

பிரபாசுடன் சலார் படம்

தொடர்ந்து படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். பிரபாஸுடன் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி உள்ளிட்டவர்களின் படங்களிலும் இவர் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார்.

வரவேற்பை பெற்ற இணையத்தொடர்

வரவேற்பை பெற்ற இணையத்தொடர்

கடைசியாக இவரது நடிப்பில் பெஸ்ட் செல்லர் என்ற இணையத் தொடர் அமேசானில் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

காதல் குறித்து வெளிப்படை

காதல் குறித்து வெளிப்படை

இவரது வாழ்க்கை எப்போதுமே திறந்த புத்தகமாக உள்ளது. தான் ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாக இருந்ததையும் இவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதேபோல தன்னுடைய காதல் குறித்தும் வெளிப்படையாக கூறியிருந்தார். முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் ஓவியர் ஷாந்தனுவை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.

காதலருடன் வீடியோ

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய காதலருடன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் தன்னுடைய காதலருடன் இணைந்து வீடியோ எடுக்க முயல்கிறார் ஸ்ருதி. முதலில் மௌனமாக இருக்கும் அவர் இறுதியில் முகம் சுளிக்கிறார்.

அதிகமாக நேசிப்பதாக பதிவு

அதிகமாக நேசிப்பதாக பதிவு

இதனிடையே இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசன், நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். உலகநாயகனின் மகளாக இருந்தபோதிலும் பல விஷங்களில் தைரியமாக இறங்கி அதில் தனது திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ருதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X