ஜன்னல் வச்ச ஜாக்கெட் இல்லையா? காதுல ஏன் தோடு போடறதில்லை? நடிகை ஸ்ருதி ஹாசனிடம் குசும்பு கேள்வி
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசனிடம், நீங்கள் ஏன் தோடு அணிவதில்லை என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
நடிகை ஸ்ருதி ஹாசன் இப்போது விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்துவருகிறார். இதை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.
இதில் உலகம் முழுதும் கலை நிகழ்ச்சி நடத்தும் பெண்ணாக ஸ்ருதி நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

இசையில் கவனம்
இதைத்தவிர வேறு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இசையில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

பிகினி உடை
வழக்கமாக பெரும்பாலான ஹீரோயின்கள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அதிகமாக பிகினி உடை டிரெஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த படங்களை பார்வையிடுவதற்காகவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அதிகமான லைக்ஸ்
அந்த புகைப்படங்கள் ஏராளமான லைக்குகளை அள்ளுவதால், நடிகைகளும் தொடர்ந்து அந்த மாதிரி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசனும் இப்போது தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.
ஏன் தோடு போடலை?
சில ரசிகர்கள், அவரை சரமாரியாகப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். சிலர் தங்கள் சந்தேகங்களையும் கேட்டுள்ளனர். அதில் ஒன்று, ஏன் நீங்க தோடு போட்டுக்கிறதில்ல... அது உங்களுக்கு அழகா இருக்குமே? என்பது.

ஜன்னல் ஜாக்கெட்
மற்றொரு ரசிகர், நீங்க வளையல் போட்டுக்கலாமே? என்று ஐடியா கொடுத்துள்ளார். வேறொரு ரசிகர், ஜாக்கெட்ல ஜன்னல் வைக்கலையா? என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











