காதல் முறிவால் கலங்கவில்லை.. ரூட்டை மாற்றிய ஸ்ருதிஹாசன்.. பிரபாஸ், லோகேஷ், ரஜினிகாந்த்.. வேறலெவல்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் 'லக்' படத்தின் மூலம் ஹீரோயினாக இந்தியில் அறிமுகமானாலும் அவருக்கு அங்கே பெரிதாக லக் அடிக்கவில்லை. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 7ஆம் அறிவு படத்தில் அறிமுகமானார்.
தனுஷ் உடன் '3', விஷாலின் பூஜை, விஜய்யின் புலி, அஜித்தின் வேதாளம், மீண்டும் சூர்யாவுடன் இணைந்து சிங்கம் 3, விஜய்சேதுபதியின் லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் சலார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் கூலி படத்தில் இணைந்துள்ளார்.
இரண்டாவது காதலும் தோல்வி: 38 வயதாகும் நடிகை ஸ்ருதிஹாசன் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார். மைக்கேல் கார்சலே எனும் வெளிநாட்டை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் சில காரணங்கள் காரணமாக பிரேக்கப் செய்து பிரிந்தார். அந்த வலியில் இருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் மும்பையை சேர்ந்த டூடுல் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சமீபத்தில், அந்த காதலும் முறிந்து விட்டது. ஆனால், இந்த முறை துவண்டு போகாமல் சினிமாவில் தனது சின்சியரான உழைப்பைக் கொட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன்.
பிரபாஸுடன் கமலும் கமல் மகளும்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சுப்ரீம் யாஷ்கின் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
லோகியுடன் டூயட்: கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜை நடிகராக மாற்றி அவருடன் ஜோடி போட்டு 'இனிமேல்' எனும் வீடியோ பாடல் ஆல்பத்தில் நடனமாடியிருந்தார் ஸ்ருதிஹாசன். காதலிக்கும் இருவர் திருமணம் செய்துக் கொண்டு அதன் பின்னர் ஏற்படும் சண்டைகளையும் பிரச்சனைகளையும் விவரிக்கும் விதமாக அந்த பாடலின் காட்சிகள் அமைந்திருந்தன.
ரஜினிகாந்த் படத்தில் ஸ்ருதிஹாசன்: கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் பாடி நடித்த இனிமேல் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் இன்று வெளியிட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் தனது நன்றியையும் லோகேஷ் கனகராஜுக்கு தெரிவித்துள்ளார்.
மீண்டும் விஜய் சேதுபதியுடன்: விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ட்ரெயின் படத்தில் பாடல்களை பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களை தாண்டி டக்காய்ட் லவ் ஸ்டோரி, சலார் 2, சென்னை ஸ்டோரி உள்ளிட்ட படங்களிலும் நடிகை ஸ்ருதிஹாசன் கமிட்டாகி செம ஸ்பீடில் தனது பணிகளில் முழு ஈடுபாட்டை காட்டி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசனின் மகள் ரஜினிகாந்தின் மகளாக கூலி படத்தில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. படம் வெளியானால் தான் அதற்கு சரியான விடை கிடைக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











