என் கதவை சாத்திட்டேன்.. இனிமேல் எனக்கு சாவி தேவையில்லை.. ஸ்ருதிஹாசன் என்ன இவ்ளோ சோகமாகிட்டாரு?

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாடல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஏகப்பட்ட கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அப்பாவின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ருதிஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'லக்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Shruti Haasan sings a soup song after here recent love breakup shocks fans

ஆனால் அந்த படத்தில் அவருக்கு எந்த ஒரு லக்கும் அடிக்கவில்லை. முதல் படமே தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதிஹாசன் 2011-ஆம் ஆண்டு சூர்யாவுக்கு ஜோடியாக 7ம் அறிவு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பல படங்கள் சொதப்பல்: 7ம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தனுஷுடன் 3, விஷாலுடன் பூஜை, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் மீண்டும் இணைந்து சிங்கம் 3, கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என பல தமிழ் படங்களில் அவர் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி படங்கள் அமையவில்லை.

சலார் தந்த சக்சஸ்: தமிழை விட தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு பிரபாஸுக்கு ஜோடியாக அவர் நடித்த சலார் திரைப்படமும் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.

செட்டாகாத காதல்கள்: லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னதாக நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்தார். தனது அப்பா கமல்ஹாசனிடம் எல்லாம் அவரை அறிமுகம் செய்து வைத்த நிலையில், விரைவில் திருமணம் செய்ய போகிறார் என தகவல்கள் பரவின. ஆனால், திடீரென இருவரும் பிரேக்கப் செய்துவிட்டு பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சாந்தனு ஹசாரிகா எனும் டூடுல் கலைஞரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அவரையும் பிரேக்கப் செய்து விட்டு பிரிந்து விட்டார்.

சூப் சாங்: லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் என ரொமாண்டிக் சாங் உருவாக்கிய ஸ்ருதிஹாசன் தற்போது "I Shut the door and hate the Key" என காதல் தோல்வி பாடல் போல ஒரு பாடலை பாடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நீங்க ஒரு ராக் ஸ்டார் எதுக்கும் கவலைப்படாதீங்க, உங்களுக்கு நிச்சயம் எல்லாமே சரியாக அமையும், இதுவும் கடந்து போகும் என நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பல ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கைவசம் பல படங்கள்: 38 வயதாகும் நடிகை ஸ்ருதிஹாசன் டக்காயிட் எ லவ் ஸ்டோரி, சலார் 2 உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சென்னை ஸ்டோரி எனும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் லவ் பிரேக்கப் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தற்போது தான் சிங்கிள் என்றும் மிங்கிளாக விருப்பமில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X