கமல் பொண்ணுக்கு இப்படியொரு பிரச்சனை இருந்ததா? 19 வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அம்பலப்படுத்திய ஸ்ருதி!

சென்னை: நடிகைகள் பொதுவாகவே தங்கள் சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை அதிகளவில் வெளியிட மாட்டார்கள்.

ஆனால், ஒரு சில நடிகைகளே ட்ரோல்களுக்கு எல்லாம் பயப்படாமல் தைரியமாக சில விஷயங்களை வெளியே சொல்லுவார்கள்.

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கமல் பொண்ணு

கமல் பொண்ணு

குழந்தை பருவத்திலேயே களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து தேசிய அளவில் விருதுகளை குவித்தவர் கமல்ஹாசன். ஹீரோவாக நடிக்க வந்து உலக நாயகன் ஆன கமல்ஹாசனுக்கும் சரிகாவுக்கும் பிறந்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். ஆனால், அவருக்கு சிறு வயது முதலே இப்படியொரு பிரச்சனை இருந்தது பலரையும் அதிர்ச்சி ஆக்கி உள்ளது.

ஸ்டேஜ் ஃபியர்

ஸ்டேஜ் ஃபியர்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு சிறு வயது முதலே பதற்றம் ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்தது எனக் கூறியுள்ளார். மேலும், மேடைகளில் ஏறி பேசுவது, கேமர முன் நின்று நடிப்பது என ஸ்டேஜ் ஃபியர் எனக்கு அதிகமாக இருந்தது எனக் கூறி திகைக்க வைத்துள்ளார்.

டாக்கிங் தெரபி

டாக்கிங் தெரபி

இந்த பிரச்சனையை சமாளிக்க டாக்கிங் தெரபியை தான் மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் தான் சகஜமாக புதியவர்களிடம் பேச ஆரம்பித்தேன் என்றும் ஸ்ருதிஹாசன் ஓப்பனாக பேசி இருப்பதை பார்த்தால், தற்போது அந்த பதற்ற பிரச்சனையில் இருந்து ரொம்பவே குணமாகி வந்துள்ளார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

19 வயதில் நடந்த சம்பவம்

19 வயதில் நடந்த சம்பவம்

14 வயதில் கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் ஒரு சிறிய ரோலில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார். 2009ம் ஆண்டு லக் எனும் பாலிவுட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தனது 19வது வயதில் நிகழ்ச்சி ஒன்றில் பேச அழைத்த போது தான் மிகவும் நடுங்கிப் போனதாகவும் வெளிப்படையாக ஸ்ருதிஹாசன் பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

பெரிய படங்களில்

பெரிய படங்களில்

அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை, நெட்பிளிக்ஸில் வெளியான பிட்ட கதலு என ஒரு பக்கம் ஒடிடி படைப்புகளிலும் மறுபக்கம் ரவிதேஜாவின் கிராக், பிரபாஸின் சலார், விஜய்சேதுபதி உடன் லாபம் என பெரிய நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X